அமீர் அப்பாஸ் மந்திரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு
ஸைய்யிதுல் ஹகீம் அல் ஆரிஃபு பில்லாஹ் அஷ்ஷைகு ஏர்வாடி தர்ஹா ஷரீஃப்,காட்டுப் பள்ளியில், ஆன்மீக அரசாட்சி புரியும் அமீர் அப்பாஸ் மந்திரி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ரோமாபுரி பேரரசில் பிரதான அமைச்சராக இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைக்கினங்க இந்திய போருக்காக மதீனாவின் அரசாட்சியை விட்டுவிட்டு, மார்க்க பணிக்காக புறப்பட்ட பாதுஷா ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு, அது குறித்து சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய அரசர்களுக்கும் கடிதம் அனுப்பி கலந்து கொள்ள வேண்டினார்கள். ரோமாபுரி இஸ்லாமிய அரசின் மன்னராக இருந்த சுல்தான் மஹ்மூது பாதுஷா அவர்கள் தம் சார்பாக பிரதம அமைச்சர் அமீர் அப்பாஸ் ரலி.. அவர்கள் தலைமையில் சுமார் 3000க்கும் அதிகமான படைவீரர்கள் கொ...