மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு குடும்ப தின விழா!!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடயீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நற் கிருபையாலும்,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நல்லாசியாலும், முஹர்ரம் பிறை 20, (24-11-2013 ) ஞாயிற்றுக்கிழமை Kandiah Hall SJK (T) Vivekananda, Jalaln V ivekananda, Brickfields, கோலாலம்பூரில் மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு குடும்ப தின விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பமாக மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ அவர்கள் திருமறையின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்பு கிராஅத் போட்டி சிறு பிள்ளைகளுக்கு நடைபெற்றது. பதினோறு குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.அனைவரும் சிறப்பான முறையில் ஓதினார்கள். நடுவராக மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ பணியாற்றினார். பின்னர் வருசை ஜுவல்லர்ஸ் உரிமையாளரும்,மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஹாஜி வருசை முஹம்மது அவர்கள்,தலைமை உரையாற்...