வெளிச்சப் பூக்கள் நூல் விமர்சனம் !!!
பல்வேறு தளங்களில் பதியப்பட்ட கட்டுரைகளின் மொத்த தொகுப்பு தான் தலை நகர் மஸ்ஜித் இந்தியா இமாம், மௌலவி ஹாஃபிழ் அல்உஸ்தாத் S.S. அஹ்மது பாகவி அவர்கள் எழுதிய “வெளிச்சப்பூக்கள்” என்னும் நூல். இது இதயத்தின் உட்சுவரை அழகுப் படுத்தும் இஸ்லாமிய சமய சிந்தனைகள். இதில் ▷ அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே ▷ மகத்தான் வெற்றி ▷ அறிவியலுக்கு அடித்தளமிட்ட இஸ்லாம் ▷ ஹிஜ்ரத் சிந்தனைகள் ▷ விஞ்ஞானத்திற்கு மெஞ்ஞானமே முன்னோடி ▷ முதல் மீலாது மாநாடு ▷ மதீனாவின் மாண்பு ▷ சூஃபியிசம் ▷ இமாம்களின் நுண்ணறிவு ▷ மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் ▷ பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை ▷ நோன்பு ஒரு அதிசயம் ▷ ஜக்காத் வருடா வருடம் வழங்குவது கடமையா ? ▷ ஹஜ்ஜுப் பெருநாள் : இரவே இல்லாத பகல் ▷ இஸ்லாமிய பெண்ணியம் ▷ ஹஜ் யாத்திரை சில சிந்தனைகள் ▷ குர்ஆன் கூறும் நடுநிலை சமுதாயம் ▷ அழைப்புப் பணி ஓர் ஆய்வு ▷ சந்தோஷம் வெளியே இல்லை ஆகிய 19 தலைப்புகளில் பூக்கள் மனம் பரப்புகின்றன. 8/3/2014 ல் காணாமல் போன M.H. 370 விமானத்தில் காணப்பட வேண்டிய காணொளி களை “அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே” என்ற கட்டுரை யில் காணலாம். உலகத்தலைவர்க...