தமிழக அரசின் மீலாது நபி அறிவிப்புகள்!!!
மீலாது நபி விழாவிற்கு1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறையை வழங்கியவர் கலைஞர். பிப்-15- மீலாது நபித்திரு நாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். அற நெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக்கருதி மீலாது நபித் திரு நாளுக்கு 1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப் படுத்தியதை நான் நினைவு கூர்கிறேன். அ.தி.மு.க அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்தது. 2001-ல் ஏற்பட்ட அ.தி.மு.க, அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்ததையும், 2006-ல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது, மீலாது நபித் திரு நாளுக்கு மறுபடியும் தி.மு.க அரசு விடுமுறை வழங்கி, இஸ்லாம் சமுதாய மக்களுக்கு உற்ற நண்பனாக திகழ்வதையும் சுட்டிக்காட்டி, மீலாது நபி திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். சென்னையில் முஸ்லிம்கள் அடக்கத்தலத்துக்கு (கபர்ஸ்...