தமிழக அரசின் மீலாது நபி அறிவிப்புகள்!!!

மீலாது நபி விழாவிற்கு1969- ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறையை வழங்கியவர் கலைஞர்.
பிப்-15- மீலாது நபித்திரு நாளை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள
வாழ்த்து செய்தியில். அற நெறிகளைப் போதித்த நபிகள் பெருமான் பிறந்த நாளை இஸ்லாம்
சமுதாய மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமெனக்கருதி மீலாது நபித் திரு
நாளுக்கு 1969-
ஆம் ஆண்டிலேயே அரசு விடுமுறை வழங்கி ஆணையிட்டு நடைமுறைப் படுத்தியதை நான் நினைவு
கூர்கிறேன்.
அ.தி.மு.க அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து செய்தது.
2001-ல் ஏற்பட்ட அ.தி.மு.க, அரசு மீலாது நபித் திருநாள் விடுமுறையை இரத்து
செய்ததையும், 2006-ல் இந்த அரசு மீண்டும் அமைந்தபோது, மீலாது நபித் திரு நாளுக்கு
மறுபடியும் தி.மு.க அரசு விடுமுறை வழங்கி, இஸ்லாம் சமுதாய மக்களுக்கு
உற்ற நண்பனாக
திகழ்வதையும் சுட்டிக்காட்டி, மீலாது நபி திருநாள் கொண்டாடும் இஸ்லாம் சமுதாய
மக்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை
உரித்தாக்குகிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது வாழ்த்து செய்தியில்
கூறியுள்ளார்.
சென்னையில் முஸ்லிம்கள் அடக்கத்தலத்துக்கு (கபர்ஸ்தான்) 2- இடம் தேர்வு மேயர் மா.
சுப்பிரமணியன் தகவல்.
பிப்ரவரி-11- முதல்வர் கலைஞரின் உத்தரவுப்படியும், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின்
அறிவுறைப்படியும், சிறுபான்மையின மக்களின் பயன்பாட்டிற்காக வேளச்சேரி உட்பட 2-
இடங்களில் முஸ்லிம்கள் (கபர்ஸ்தான்) அடக்கம் செய்வதற்காகவும் கிறிஸ்தவர்கள்
அடக்கம் செய்வதற்காக 2- இடங்களும் என மொத்தம் சென்னையில் 4-இடங்கள் தேர்வு
செய்யப்படும் இதற்கான அறிவிப்பு வரும் மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில்
அறிவிக்கப்படும்.இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாள்- சென்னையில்-16-ந்தேதி மதுக்கடைகளை மூட
தமிழக அரசு உத்தரவு
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது;
வருகிற 16 -ந்தேதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த நாள். இதனையொட்டி அன்று
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் (டாஸ்மாக்) மற்றும் அதனைச்சார்ந்த
பார்கள் மற்றும் கிளப்புகளில் உள்ள பெர்மிட் ரூம்கள் அனைத்தும் கண்டிப்பாக
மூடப்பட்டிருக்க வேண்டும்.அன்றைய தினம் மது விற்ப்பனை செய்யக்கூடாது. தவறினால்
சம்பந்தப்பட்டவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த
உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நன்றி- மணிச்சுடர் நாளிதழ் சென்னை 12-02-2011 வெளியூர் 13-02-2011
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு