இராமநாதபுர மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!!!
பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்
பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம்,பிப்,19; -ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப் பெருமக்கள் மற்றும் பணியாளர்கள் (மோதினார்கள்) நலத்திட்ட உதவிகள் பெறலாம் என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ; இஸ்லாமிய பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாப்பெருமக்கள், பணியாளர்களுக்கு (மோதினார்களுக்கு) நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. விபத்து மரணத்திற்கு ரூ ஒரு லட்சம், விபத்தில் ஊன முற்றோருக்கு 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையும், இயற்கை மரணத்திற்கு 15- ஆயிரமும், ஈமச்சடங்கு செலவிற்கு 2 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக 10-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெண் குழந்தைகளுக்கும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் இவ்வாரிய உறுப்பினர்களின் முதல் இரண்டு வாரிசுகளுக்கு கல்வித்தகுதிக்கேற்ப ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையிலும் வழங்கப்படுகிறது. திருமண உதவித்தொகை 2 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை 6 ஆயிரம், கருச்சிதைவுக்கு 3 ஆயிரம், கண்ணாடி வாங்க 500, முதியோர் உதவித்தொகை 500 –ம் வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை
Comments
Post a Comment