கோவை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நடத்திய மாபெரும் மீலாது மாநாடு.
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும்,பூமான் நபி (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்,நாதாக்களின் நல்லாசியாலும்,சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக உத்தம நபி (ஸல்)அவர்களின் 1486 வது உதயதின விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4-30 மணியளவில் கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் அமைந்துள்ள கிரசென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும்,மௌலானா, மௌலவி அல்ஹாஜ், அபுல்அய்தாம், கமருல்உலமா, ஷைகுனா, கேரள மாநிலம் காந்தபுரம் A.P.அபுபக்கர் முஸ்லியார் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஹுப்பூ ரஸுல் (ஸல்) என்ற தலைப்பில் சிறப்புப்பேருரை வழங்கினார்கள். பெங்களூர் தாருல் உலூம் ஸஃபிலுர் ரஷாத் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.ஷைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சத்தியமார்க்கமும் சமீப குழப்பங்களும்,என்ற தலைப்பில் சிறப்புறையாற்றி...