அறுத்தெரிந்திடு தோழா......... அகந்தையை !!!!
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஜகாத்,ஸதக்கா,கொடுப்பதற்குத் தகுதியானவர்களுக்கு, அல்லாஹ் கடமையாக்கியுள்ள இன்னொரு அமல் குர்பான். குர்பான்,குர்ஆன் இந்த இரண்டுக்கும் ஒரு எழுத்து வித்யாசப்படும்.குர்பான் என்றாலும்,குர்ஆன் என்றாலும்,நெருங்குதல், அடுத்துச்செல்லல் என்பதே பொருளாகும். இறைமறை தன்னை இதயத்தில் சுமந்து,இறை அன்புக் கட்டளைகளை,நமக்கருளிய,இறைத்தூதர் பெருமானார் ( ஸல் ) அவர்களின் உன்னதமான அமல்களில் குர்பானியும் ஒன்றுதான்.குர்பானி கொடுக்கும் மனிதன், குர்பானி பிராணியை அறுக்கும் போதே தனது உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அகந்தையை,தற்பெருமையை, ஆனவத்தை அறுத்து எறிவதோடு,நான்,நான்தான்,என்ற அகம்பாவத்தை அறுத்தெரிய வேண்டும். அப்படி அறுத்தெரிந்தால்தான் குர்பான் என்ற சொல்லின்,நெருங்குதல் என்ற பொருள் உணர்ந்து,இறை நெருக்கம் பெற ஏதுவாகும். யா அல்லாஹ் உன்னை நெருங்கும் உன்னத அமலையும் எங்களுக்கு கொடுத்து,உன் திருப்பொருத்தம் பெற்றிடும் குர்பானியையும் தந்து அருள்புரிவாயாக மேலும்,. அனைவர்களுக்கும் எனது தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ஆமீன்.வல்ஹம்து லில...