சஃபர் மாதம்: சங்கடமா? சந்தோஷமா? சாதாரணமா?
யானைக்கு தும்பிக்கை எப்படியோ மனிதனுக்கு நம்பிக்கை அப்படி. நம்பிக்கை எனும்போது ... இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை இருக்கவேண்டும் ஆனால் மூடநம்பிக்கை அறவே இருக்கக்கூடாது. மனித சமூகத்தில் மண்டிக்கிடக்கும் மடமைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மூட நம்பிக்கையின் முடைநாற்றத்தில் மூழ்கிக்கிடக்கும் முட்டாள் தனமான மக்கள் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயம். எத்தனை வகையான நம்பிக்கைகள்? அப்பப்பா.. மக்கள் தொகையைவிட மடமைகளின் தொகை அதிகமாக இருக்கும்போல் தெரிகிறதே.. உலகின் எல்லா பகுதி மக்களிடமும் எதாவது ஒரு வகையில் மூடநம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது, இவற்றில் பலவகை உள்ளது. ஏன் செய்கிறோம் என்று தெரியாமல் காலம் காலமாக செய்கிறோம் அதனால் தொடர்கிறோம் என்பதும் ஒரு வகையான மூடநம்பிக்கை. பண்டைய காலத்தில் ஒரு ஆசிரம குடில் இருந்தது, அதில் ஒரு குருவும், சில சீடர்களும் இருந்தார்கள், தினமும் அவர்களுக்கு குரு பாடம் எடுப்பது வழக்கம், ஒரு நாள் பாடம் எடுக்கையில் ஒரு பூனை குருவுக்கு குறுக்கும் நெடுக்குமாக போய் தொந்தரவு செய்...