தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!! ஷரீஅத் அறிவிப்பு. அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஹிஜ்ரி 1434- ஸஃபான் பிறை 29, (09-07-2013) ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை ரமலான் பிறை தென்படாததினால் ஆங்கில மாதம் (11-07-2013) ஆம் தேதி வியாழக்கிழமை ரமழான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர் வரும் (05-08-2013) ஆம் தேதி திங்கட் கிழமை பின்னேரம் செவ்வாய்க் கிழமை இரவு லைலத்துல் கத்ரு இரவாக கொண்டாடப்படும் என்பதை, கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் (10-07-2013) -அன்று தெரிவித்தார்கள். ஸதக்கத்துல் ஃபித்ரு ஷாஃபி மத்ஹபின்படி நடுத்தரமான அரிசி 2.400 கிலோகிராம். ஹனஃபி மத்ஹபின்படி நடுத்தரமான கோதுமை 1.600 கிலோகிராம் அல்லது அதன் கிரயமாக ரூ.50/-- ரூபாய் ஐம்பது ...