சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்
From: Ganimathullah Alim :< ganimathullah@rocketmail.com > முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012) அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ...