Moulidur Rasool Invitation
சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் மாதம்
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! முஸல்லியன்!!!!
முஸல்லிமா!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துக்கள் சொல்லியும்,பன்னிரெண்டு நாட்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை. வரலாறுகளை நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி நல் அமல்கள் அதிகம் செய்து அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம்.அது சமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா, மலேசியா, மற்றும் உலகமெங்கும் தமிழர்கள் வாழும் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும். இன்னும் கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் பெருமானாரின் வாழ்க்கை வரலாறுகளை பன்னிரெண்டு நாட்களும் பயான் செய்யப்படும்.ஆகவே இச்சிறப்பான மஜ்லிஸ்களில் முஃமினான ஆண், பெண்கள் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் பிறந்த தின வாழ்த்துக்களை கூறி சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும் அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்…..
Comments
Post a Comment