சுவர்க்க லோக தலைவி அன்னை பாத்திமா நாயகியாரின் ஒரு நாள் பொழுது....!
ஊரெங்கும் நாளை வர இருக்கும் பெருநாளுக்காக சந்தூஷமும், குதூகலமும் கொப்பளிக்க மக்கள் தயாராகி கொண்டு இருக்கின்றனர். இருலோக இரட்சகரான முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் அருந்தவப்புதல்வி சுவர்கலோக தலைவி பாத்திமா நாயகி திருக்குர்ஆன் வசனங்களை ஓதியவர்களாக எளிய ஒட்டுப்போட்ட ஆடையில் திரிகையில் கோதுமை அரைத்தவகர்கலாக உள்ளார்கள். இந்த கோதுமையும் எப்படி வந்தது என்றால்... வெளிய சென்று வீடுதிரும்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பாத்திமா உண்பதற்கு ஏதும் உணவு இருக்கின்றதா? என வினவ இருவேளை பட்டினிதான், குழந்தைகளும் பட்டினியோடு தான் விளையாண்டு கொண்டுள்ளனர். கோதுமையோ, மாவோ எதுவும் இல்லை என பாத்திமா நாயகியார் பணிவுடன் பதிலளிகிரார்கள். உடனே வெளியே கிளம்பிய அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எதாவது வேலை கிடைக்குமா என்று தேடி அலைகின்றார்கள். முடிவில் ஒரு யூதன் தன ஒட்டகத்திலிருந்து ஏராளமான மூட்டைகளை இறக்குவதற்கு யோசனையில் இருக்கையில் அய்யா ! ஏதும் வேலை இருக்கின்றதா ? என்று குரல் கேட்டு திரும்பிய யூதன் ஆம் அந்த பொதி மூட்டைகளை இறக்கி உள்ளே அடுக்க வேண்டும். அடுத்த சில நிமிடங்களில் பசியையும் பொருட்படுத்த...