ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.
ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள். அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள். அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் ப...