புவனகிரி மார்க்க மேதை அஷ்ஷைஹ்,அல்லாமா முர்ஷீத் பாக்கீ பில்லாஷா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு !!!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) புவனகிரி மார்க்க மேதை அஷ்ஷைஹ்,அல்லாமா முர்ஷீத் பாக்கீ பில்லாஷா ஹஜ்ரத் கிப்லா அவர்கள் 16.02.2015 திங்கள்கிழமை அன்று, புவனகிரியில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 17.02.2015 செவ்வாய்க்கிழமை புவனகிரியிலுள்ள, மதரஸா பாக்கீ பில்லாஷா வளாகத்தில் நடைப் பெற்றது. புவனகிரியில் மறைந்த மார்க்க மேதை அல்லாமா முர்ஷீத் பாக்கீபில்லாஷா ஹஜ்ரத் நல்லடக்கத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று துஆ செய்தனர் . பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற அன்னாரின் ஜனாஸா தொழுகையினை மௌலானா கலிமுல்லாஷா ஹஜ்ரத் நடத்தி வைத்தார்கள். , மௌலானா முஹினுத்தீன் ஹசன் ஹஜ்ரத் துஆ செய்தார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பேராசிரியர் கே .எம்.காதர் மொகிதீன் , மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி.ஏ .ஷபிகுர் ரஹ்மான் ஹஜ்ரத் , தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்...