வெள்ளிக்கிழமையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !!!
வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் வாராந்திர பெருநாள் ஆகும். நம்முடைய ஒவ்வொரு பெருநாளும் விசேச கவனத்திற்குரியவை. அதிகப்படியான இபாதத்துக்கள் அதிகப்படியான மனிதாபிமானக் கடமைகளை வலியுறுத்துபவை (உதாரணங்கள்) வெள்ளிக்கிழமையையும் நாம் அந்த வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அவசர கதியிலான ஒரு கூட்டுத்தொழுகையாக மட்டுமே வெள்ளிக்கிழமையை நாம் இதுவரை பயன்படுத்திக் கொண்டிருப்போம் எனில் அந்த நிலை மாற வேண்டும். வார நாட்களில் சனிக்கிழமை யூதர்களுக்கும் ஞாயிற்றுக் கிழமை கிருத்துவர்களுக்கும் பெருநாளாக இருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை அனைத்து தரப்பினரிடமும் பரக்கத்தான ஒரு நாளாக பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்தப் படுகிறது என்பது எதார்த்தமாகும். மற்ற சமூகத்தவர்கள் வெள்ளிக்கிழமையை தவற விட்டு விட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். عَنْ حُذَيْفَةَ ، قَال : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:أَضَلَّ اللَّهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا ، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الأَحَدِ ، فَجَاءَ اللَّهُ بِنَا ، فَهَدَانَا اللَّهُ لِيَوْمِ الْجُمُعَةِ ، فَجَعَلَ الْ...