பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மார்க்க அறிஞரும், பேனுதல் மிக்கவரும், பள்ளப்பட்டி ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாமும்.பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் (13.12.2013) வெள்ளிக்கிழமை அதிகாலை பள்ளப்பட்டியில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா தொழுகை ,இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு பள்ளப்பட்டி பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில் நடைபெறுகிறது . மார்க்க அறிஞரும், பேனுதல் மிக்கவராகவும், திகழ்ந்த இந்த உலமாப் பெருந்தகையின் சொந்த ஊர் பள்ளப்பட்டி. பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியில் பத்து ஆண்டுகாலம் முதல்வராக பணிபுரிந்து வந்தவர்கள். ஹஜ்ரத் அவர்களுக்கு 3 பெண்மக்களும்,1 ஆண்மகனும் உள்ளனர். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னது...