சித்தார்கோட்டை,மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் 21- வது பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1437-ஆம் ஆண்டு ஷஅபான் பிறை 18- ( 26-05-2016 ) வியாழன் மாலை, வெள்ளி இரவு 7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப் பிறகு, முஹம்மதியா மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 21- வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப் பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் ;- முன்னிலை ;- அல்ஹாஜ் அ.முஹம்மது யூசுப் அவர்கள். (ஆயுட்கால தலைவர்- முஹம்மதியா பள்ளிகள்) அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். (புரவலர் –முஹம்மதியா பள்ளிகள்.) ஜனாப் ஆரிப்கான் அவர்கள் (புரவலர்- முஹம்மதியா பள்ளிகள்.) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ் மு.ஷாகுல் ஹமீது கனி அவர்கள். (தாளாளர் முஹம்மதியா பள்ளிகள்.) மௌலானா மௌலவி அல்ஹாஜ் சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹழரத் அவர்கள். (நிறுவனர் - சித்தாரிய்...