நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வரலாறு !!!!!
அறிமுகம் மாபெரும் தவசீலர், சங்கைக்குரிய குதுபு, ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்களால் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம்.நாகூர், இந்த பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த மகானைதான். ஆம், மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித அடக்கஸ்தலம் இந்தியாவில், தமிழ் நாட்டில், நாகூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஜனனம் ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அண்மையில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறை 10 ஜமாத்துல் ஆகிர் மாதம் ஹிஜ்ரி 910 (கி.பி. 1491) இல் பிறந்தார்கள். அவர்களின் தந்தை பெயர் ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப், தாயார் பெயர் பீபி பாத்திமா. ஜனனத்தின் மகத்துவம் ஹஜ