தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் ஷைகுல் ஹதீஸ் அபுல் பயான் எ.இ.அப்துர் ரஹ்மான் ஹழரத் அவர்களின் உருக்கமான உரை!

அக்பர் பாதுஷாவை அப்துஷ் ஷகூராக்கியவர் அண்ணல் நபியின் பேரர் ஹுஸைன் (ரலி) வழியில் வந்த தாஜுஷ் ஷரீஅத் ஷம்சுல் ஹுதா ஹழரத் (ரஹ் ) அவர்கள்.ஷெய்குல் ஹதீஸ் ஹழரத் கிப்லா உருக்கம். இனிய ஈதுப் பெருநாளின் மாலை நேரத்தில் மனதை கனக்கவைக்கும் செய்தியாக ஆவூர் அப்துஷ் ஷகூர் ஹழரத் மவ்த் செய்தி வந்துவிட்டது. அன்று இரவு என் இனிய நண்பர்களில் ஒருவரான மவ்லவி அஹ்மது ஷாஹ் ஹசனியுடன் ஆவூருக்குப் பயணமானேன். புதன்கிழமை லுஹருக்குப் பின் நல்லடக்கமும் தொடர்ந்து இரங்கல் கூட்டமும் நடந்தது., தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் ஷெய்குல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் ஹழரத் தலைமையேற்று பேசியதில் இருந்து சுவராசியம் நிறைந்த ஒரு பகுதி.. நான் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு என் சொந்த தம்பியாகவே என்னுடன் பழகியவர் அப்துஷ்ஷகூர் ஹழரத். அவர் ஆலிமிற்காக ஒதுவதற்கு முதலில் திருநெல்வேலி பேட்டை ரியாலுல் ஜினான் அரபிக் கல்லூரிக்கு வந்தார். ஒரு ஜும்ஆ நாளன்று வந்த அப்துஷ் ஷகூர் ஹஸரத் நேரடியாக நிர்வாகிக்ளைச் சந்தித்து ஜும்ஆ உரையாற்ற அனுமதிகேட்டு வாங்கிவிட்டார். அழகான தமிழில் ஜும்ஆ உரையாற்றி அனைவரையும் கவர்ந்து விட...