துவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல் உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில் பாடத் துவக்க விழா இன்று அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் மற்றும் மூத்தஆலிம்கள் கலந்துகொண்டனர். (தீனின் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது அர்க்கம் ரளியல்லாஹுஅன்ஹூ வீடு.) (தாருல் உலமாவில் தொடங்கப்பட்ட ஹிஃப்ழு மதரஸாவின் பெயர் தாருல் அர்க்கம்.) வல்லஅல்லாஹு இம் மத்ரஸாவை கியாமத் வரை சிறப்பாக செயல்பட செய்வானாக! ஆமீன்.வஸ்ஸலாம்.