ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு
பாதுஷா ஹழ்ரத் குத்புல் அக்தாப் சுல்தான் ஸையத் இப்ராஹீம் ஷஹீத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியார் ஹழ்ரத் ஸைய்யிதா ஜைனப் அம்மா ரலியல்லாஹு அன்ஹா (சையத் அலி ஃபாத்திமா அம்மா) அவர்களின் சகோதரர், பாதுஷா ஷஹீத் நாயகம் அவர்களின் மைத்துனர் ஹழ்ரத்_ஸையிதினா_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். மதீனத்து அரசாட்சியை ஷஹீத் நாயகம் அவர்கள் துறந்து இந்திய பயணம் புறப்பட ஆயத்தமான போது, பாதுஷா நாயகம் அவர்களின் குடும்பத்தினர், பெண்கள், குழந்தைகளுக்கு காப்பாளராக இருந்து பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுடன், போருக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பொறுப்பேற்று நிறைவேற்றியவர் அவர்களின் மைத்துனரான #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன்_ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆவார்கள். ஹழ்ரத் #அபூதாஹிர்_மதினி_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு தாய்மாமாவான அவர்கள், அனைத்து நிலைகளிளும் துணை நின்றவர்கள் #ஹழ்ரத்_ஜைனுல்_ஆபிதீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். போர் யுக்திகளை அமைப்பதில் முக்கிய தளபதியாக இருந்தார்கள். 6 போர் வரை எதிரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி அவர்களின் படைகளை மாய்த்த ஹழ்ரத் #ஜைனுல்...