ஸஹாபாக்கள் என்றால் யார்?
அரபி மொழியில் ஸஹாபா என்பது நண்பர்கள், தோழர்கள் என பொருள்படும். இது பன்மை வடிவமாகும். இதன் ஒருமை வடிவம் ஸஹாபி (தோழர்) என்று சொல்லப்படும். இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் என்பது நபிகள் நாயகம் ﷺ அவர்களின் தோழர்களை குறிக்கும். ஒருவர் ஸஹாபா என அழைக்கப்பட பின்வரும் தகுதிகள் வரையறை செய்யப்படுகிறது: நபிகள் நாயகம் ﷺ அவர்களின் காலத்தில் வாழ்ந்து அன்னவர்களை நேரடியாக தமது கண்களினால் பார்த்து அன்னவர்களை விசுவாசம் கொண்டு கடைசி வரை முஸ்லிமாகவே வாழ்ந்து மரணித்தவர்களையே ஸஹாபாக்கள் என்று சொல்கிறோம். ஸஹாபாக்களின் அந்தஸ்து இஸ்லாத்தில் ஸஹாபாக்கள் நபிமார்களுக்கு அடுத்தப்படியான மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்து நோக்கப்படுகின்றனர். அவர்களிலும் சில ஸஹாபாக்கள் சிலரை விட உயர்ந்த அந்தஸ்தில் கணிக்கப்படுகின்றனர். ஸஹாபக்களிலேயே பிரதம அந்தஸ்தில் வைத்து கருதப்படுவர்களாக அபூபக்கர், உமர், உஸ்மான், அலி, தல்ஹா, சுபைர், அப்துல் ரஹ்மான் இப்ன் அவ்ப், ஸஃத் பின் அபீ வக்காஸ், ஸைத், அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் நபிகள் நாயகம் ﷺ அன்னவர்களால் சுவர்க்கவாதிகள் என்று இந்த பூமியில் வைத்தே சுபசோபனம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபா...