ரமலான் தரும் ஈமானின் சிந்தனைகள் !!!
நேன்பில் புடம் போடப்படும் ஈமான் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பும் அருளும் நிறைந்த நேசமிகு நேயர்களே......! உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமலான் மாதத்தில் பூமான் நபி (ஸல்) அவர்களின் பாக்கியமிகு உம்மத்தாகிய உங்களை சந்திப்பதில், உரையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நோன்பு ஓரு அதிசயம் பணக்காரன் பட்டினி கிடக்கும் அதிசயம்....! சதாவும் தின்பண்டம் கேட்டு நச்சரிக்கும் சிறுவன் கூட நோன்பு நோற்று கொடுத்தாலும் திண்ணாமல் அடம்பிடிப்பது ஓர் அதிசயம்….! ரமலான் என்றாலே சுட்டெரிப்பது. நோன்பாளியின் பாவம் இதில் சுட்டெரிக்கப்படுகிறது. உடலின் செயல்பாடான இஸ்லாத்தையும் உள்ளத்தின் வெளிப்பாடான ஈமானையும்,நோன்பு ; பசியென்னும் நெருப்பிலே புடம் போட்டு ஜொலிக்கச்செய்கிறது. “இறைநம்பிக்கையாளர்களே......! உங்களுக்கு முன்பிருந்தவர்களின்மீது கடமையாக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் பரிசுத்தவான்களாவீர்கள்.” {அல்குர்ஆன். 2:183} 1 நோன்பு ...