முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாமின் நினைவகம் !!!

முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களின் நினைவகம் வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி அவரது பிறந்த ஊரான இராமேஸ்வரம் அருகிலுள்ள பேய்கரும்பில் திறப்பு விழா காண உள்ள நிலையில், இந்த நினைவகத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை பற்றிய அரிய தகவல்கள் தெரியவந்துள்ளது. பிறந்த நாள், நினைவு நாளில் மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சூரிய கதிர்கள்: நினைவகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம்அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு நாளன்று இராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவகத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அறிந்து கொள்வோமா..? “தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று வள்ளுவப் பெருந்தகை தனது உலகப் பொதுமறையான திருக்குறளில் பதிவிட்ட உவமைக்கு எடுத்துக்காட்டாக இந்த பூவுலகில் வெகு சிலரே தோன்றியுள்ளனர். கம்சனின் அடக்குமுறை ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலையில் பிறந்த கண்ணன், பிற்காலத்தில் கீதா உபதேசம் என்னும் பகவத் கீதையின் மூலம் இந்த உலகில் தர்ம நியாயங்களை நிலைநாட்டும் வகையில் பகவத் கீத...