இராமநாதபுரத்தில் உத்தம திரு நபியின் உதய தினவிழா














From: Ganimathullah Alim :<ganimathullah@rocketmail.com>

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரத்தில் (5-2-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசா பள்ளிவாசலில்
உத்தம திருநபியின் உதயதின விழா, இஸ்லாமிய பல்சுவைப் போட்டிகள்,
பரிசளிப்பு விழா ஈசா பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹஸன் தலைமையில்
நடைபெற்றது.இப்ராஹீமிய்யா மதரஸா மாணவர் அமீர்தீன் கிராஅத் ஓதினார்.
ஈசா பள்ளி நிர்வாகக் குழுவினர்கள் முன்னிலை வகித்தனர். ஈசா பள்ளிவாசல்
இமாம் முஹம்மது ஹஸன் யாசீனிய் துவக்கவுரை நிகழ்த்தினார். காதர்
பள்ளிவாசல் இமாம் முஹையத்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி வாழ்த்துரை
வழங்கினார்.சித்தார்கோட்டை தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ்
அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்கள்.முன்னதாக
மாணவ மாணவியரின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள்,பேச்சுப்போட்டி,
ஹதீஸ்போட்டி,மற்றும் கலந்துறையாடல் நடைபெற்றது.வெற்றி பெற்ற
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள்.
செயலாளர் நஸ்ருல்லாஹ் கான் நன்றி கூறினார்.பெரிய முஹல்லா
பள்ளி இமாம் முஹம்மது மன்சூர் ஆலிம் துஆ ஓத மீலாதுப்
பெருவிழா இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் முஸ்லிம்லீக்
இளைஞர் அணி செயலாளர் செய்யிது இபுறாகீம், முஹம்மது
இபுறாகீம், எஸ்,எஸ், சுல்தான் மற்றும் ஏராளமானோர்  கலந்து
கொண்டார்கள். வஸ்ஸலாம்.
நன்றி-மணிச்சுடர்
வெளியீடுமன்பயீ ஆலிம்.காம்

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு