கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா தைக்காவின் அறங்காவலர் அல்லாமா டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் ஹழ்ரத் கிப்லா அவர்கள் !!!
*இன்று உலகில் உயிா் வாழும் மாா்க்க மேதைகளில் தலைசிறந்தவா் நமது டாக்டா் ஷெய்கு நாயகம் அதிசங்கைக்குாிய அல்லாமா தவத்திரு தைக்கா ஷுஐப் ஆலிம் நாயகம் அவா்கள்.*
_தென்னகத்திலும் சரந்தீப் நாட்டிலும் தீனுல் இஸ்லாம் செழித்துப் பரவுவதற்குக் காரணமான ஞானவான்களின் பாரம் பாியத்தில் மெஞ்ஞான ஜோதி தவத்திரு தைக்கா அஹமது அப்துல் காதிா் ஆண்டகை (பொிய ஷெய்கு நாயகம் ) அவா்களின் அருமந்த மகனாராகப் பிறந்தவா் நம் டாக்டா் ஷெய்கு நாயகம் அவா்கள்._
தாய் மொழியாகிய தமிழ், வணிக மொழியாகிய ஆங்கிலம், மாா்க்க மொழியாகிய அரபி ஆகிய மும் மொழிகளிலும் தோ்ச்சிபெற்றிருப்பதுடன், இம் மொழிகளில் பேசவும் எழுதவும் திறமை பெற்று டாக்டா் ஷெய்கு நாயகம் விளங்குகிறாா்கள். இத்துடன் உா்து,மலயாளம், சிங்களம்,கண்டனீஸ் (சீனம்) இன்னும் பல மொழி அறிவும் பெற்றிருக்கிறாா்கள்.
மாா்க்க ஞானம் இந்தக்குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருந்தாலும், ஞானத்தில் சுடாிடும் மேதையாக, பிறசமய தத்துவங்களை எல்லாம் இஸ்லாமிய சமயத்துடன் ஒப்பிட்டு அறியும் ஆசானாகவும் விளங்குகிறாா்கள்.
என்நாடும் போற்றும் தென்நாட்டுத் தென்றல்,கீழக்கரையின் ஜோதி மகான் மாப்பிள்ளை ஆலிம் நாயகம் அவா்களின் குலக்கொழுந்தாக விளங்கும் டாக்டா் ஷெய்குனா அவா்களையே தம் ஞானபிதாவாக, பல லட்சம் பக்தா்கள் போற்றிப் பின்பற்றி வாழ்வதில் பொருத்தமே இருக்கிறது.
முத்துவணிகமும், வைர வியாபாரமும் இவா்கள் குடும்பத்தொழில், உலகளாவிய வணிக வேந்தராகவும் திகழும் நமது டாக்டா் ஷெய்கு நாயகம் அவா்கள் இந்தவாய்ப்பின் மூலம் தம் அறிவு ஞானத்தை மேன் படுத்திக்கொள்ளவும் தவறவில்லை.
புகழ் மேவிய பல்கலைக் கழகங்களுக் கெல்லாம் சென்று ஆய்வு நடத்திய டாக்டா் ஷெய்கு நாயகம் அவா்கள், அமொிக்க நாட்டிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தம் இரு ஆய்வுகளைச் சமா்ப்பித்து மூதறிஞா் என்ற டாக்டா் பட்டமும் பெற்றிருக்கிறாா்கள்.
பல்வேறு மதங்களின் தத்துவங்களையும் பண்பாடுகளையும் நன்கறிந்துள்ளதுடன், வேறுபட்ட நாடுகளின் அரசியல் அமைப்புக்களைப் பற்றிய விாிந்த அறிவையும் பெற்றிருக்கிறாா்கள்.
சமய போதகராக, சிறந்த நூலாசிாியராக, வெற்றி பெற்ற வணிகராக, அருளையும் பொருளையும் மற்றவருக்கு வழங்கும் வள்ளலாக, ஒழுக்கத்தில் சிறந்தவராக, லட்சோப லட்சம் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக விளங்கும் நமது டாக்டா் ஷெய்கு நாயகம் தவத்திரு தைக்கா ஷுஐப் ஆலிம் அவா்களின் ஆராய்ச்சித் திறனும், அனுபவ முதிா்ச்சியும் ஐக்கிய நாடுகள் அவைக்கும் கிடைக்குமானால் அதுபெரும் பேறாகவே அமையும்.
*கருணை மிக்க இறைவன் பேரருள் துணை நிற்குமாக!*
Comments
Post a Comment