இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்வுரிமை மாநாடு !!!
03-02-2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்வுரிமை மாநாடு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஹாஜி A. வருசை முஹம்மது தலைமை ஏற்று நடத்த மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலிம் பெருமக்கள், சமுதாய புரவலர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் மவ்லவி யூனுஸ் ஆலிம் அருள்மறை ஓத மாவட்ட செயலாளர் M.S.A.L. முஹம்மது பைசல் வரவேற்புரை ஆற்ற இளைஞர் அணி, மாணவர் அணியினரின் வீரியமிக்க உரைகள்; கூட்டத்தை சுறுசுறுப்பாக்கியது.
மஃரிப் தொழுகை இடைவெளிக்குப் பின் அடுத்த அமர்வு ஆரம்பமானது.
மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹம்மது அவர்களின் துவக்க உரையும் மாவட்ட காஜி ஸலாஹ{த்தீன் ஆலிம், கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹ{சைன் , சீனா தானா காக்கா ஆகியோரின் பேச்சுக்கள் சிந்திக்க வைத்தன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் கடந்து வந்த பாதைகள் , சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெற்ற வாக்குகளின் புள்ளி விபரங்கள் , ஆதம் நபி முதல் மறைந்து வாழும் இறைநேசர்களின் தியாகங்களை எல்லாம் தமக்கே உரிய பாணியில் பேசிய மாநிலப் பொருளாலர் ஹாஜி M.S.A. ஷாஜஹான் அவர்களின் பேச்சு இளைய தலைமுறைக்கு பல சரித்திரச் சான்றுகளை நினைவுபடுத்தி உற்சாகப்படுத்துவதாக அமைந்தது.
ஞானக்கடல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் வழிவந்த தாய்ச்சபையின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.A.M முஹம்மது அபூபக்கர் ஸாஹிப் அவர்களின் எழுச்சி உரை தடம் மாறும் இளைஞர்களை நேர்வழிப்படுத்தும் சீர்திருத்த உரையாகும்.
வக்ஃபு வாரியத்தை செயல்படுத்த பிப்ரவரி 14 அன்று ஆர்பாட்டம், அக்டோபர் 04 சிராஜுல்மில்லத் பிறந்த தினத்தன்று மஹல்லா ஜமாஅத்களின் மாநில மாநாடு போன்ற அறிவிப்புகள், இராமநாதபுரம் மண்ணில் மறைந்த முஸ்லிம் லீக் தியாகி அப்துற் ரஹீம் அவர்களுடன் சேர்ந்து தேர்தல் பணியாற்றிது , முஸ்லிம் லீக்கிற்காக தியாகம் செய்து மறைந்த எக்ககுடி ராவுத்தர் பிள்ளை, பனைக்குளம் முபாறக் ஆலிம் , மண்டபம் லியாகத் அலி , முகவை ஷேக் தாவூத், கீழக்கரை அப்துல் காதர் போன்றவர்களை எல்லாம் ஞாபகப் படுத்தி பேசிய தேசியத் தலைவர் பேராசியரியர் K.M. காதர் மொகிதீன் EX,MP அவர்களின் பேச்சு தலைமைக்கே உண்டான சிறப்புக்களோடு அமைந்தது.
மாவட்ட திமுக செயலாளர் சுப.த.திவாகர் , திமுக மாநில் மகளிர் அணி துணைச் செயலாளர் பவானி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோரின் உரைகளும் மிகச் சிறப்பாகவே அமைந்தன.
வாழ்நாள் சாதனையாளர்கள் விருது, சமுதாயப் புரவலர்கள் விருது , தாய்ச்சபையில் தொடர்ந்து பல்லாண்டுகள் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு விருது போன்ற விருதுகள் வழங்கி கௌரவித்து இருப்பது அழகிற்கு அழகூட்டியது போல் மாநாட்டை மேலும் சிறப்பாக்கியதுடன் வரவேற்கதக்கதும் அவசியமானதுமாகும்.
ஓவ்வொரு பேச்சாளர்களின் சிறப்புத் தகுதிகள், குடும்பத்தின் சிறப்புகள் இவற்றை எல்லாம் சொல்லி பேச்சாளர்களை பேச அழைத்த முறையும், எளிய தமிழ் நடையும், கூட்டத்தினர் சோர்வின்றி உற்சாகத்துடன் இருக்க நகைச்சுவையுடன் கூடிய அறிவிப்புகளுடன் நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய அமீரக காயிதே மில்லத் பேரவை செயலாளர் S.K.S. ஹமீதுற் ரஹ்மான் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்றால் மிகையல்ல.
மொத்தத்தில் மாநாடு மிகச் சிறப்பாக இறைதிருப்தியோடு நடைபெற்றுள்ளது என்பதையே நடைபெற்ற மாநாட்டு நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அத்துடன இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பழைய உத்வேகத்துடன் வீருகொண்டு எழுந்துள்ளது என்பதை ; மாநாட்டிற்கு திரண்டு வந்த பல்லாயிரக்கனக்கான மக்கள் கூட்டம் மெய்பித்துள்ளது.
மவ்லவி செய்யது முஹம்மது மதனீ ஆலிம் பனைக்குளம்
மாவட்ட ஊடகத் துறை செயலாளர்
04-02-2018
Comments
Post a Comment