மத்திய அரசின் பூச்சாண்டிகளை புஷ்வானமாக்கிய தமிழக முஸ்லிம்களின் ஒன்றுக்கூடல் !!!



முஸ்லீம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு என்ற பெயரில் ஷரீஅத்தில் கைவைக்கும் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 05-01-2018 அன்று மிகச் சிறப்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.
.
இதை ஏற்பாடு செய்த சுன்னத் வல் ஐமாஅத் தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபையின் மாநில முதன்மை நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாநில, மாவட்ட, மாநகர, வட்டார நிர்வாகிகள் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாத்தினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும், துஆக்களும்.
.
கடந்த சில காலமாக மார்க்கம் என்ற பெயரில் அரசியல் பிழைப்புக்காக, பெட்டிக்காக பணத்தை கொடுத்து கூட்டத்தையும், முழு குடும்பத்தையும் நடு தெருவுக்கு இழுத்து வந்து பூச்சாண்டி காட்டி வயிறு வளர்த்த வஹாபிகளின் பூச்சாண்டிகளை புஷ்வானமாக்கி தமிழகத்தின் உண்மையான முஸ்லிம்களின் கூட்டத்தை முழு உலகிற்கும் கட்டிய தமிழக முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சமுதாயத்திற்குள் ஊடுருவியுள்ள முக்கா வஹாபிகள் மற்றும், பக்கா வஹாபிகள் அனைவர்களையும் விட்டும் சமுதாயத்தை பாதுகாக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு