முகவை தீன்சுடர் தீன் இசைப்பேரரசு அல்ஹாஜ் எஸ்.ஏ.சீனி முகம்மது
"இந்தியா எங்கள் தாய்நாடு" என்ற பாடலின் மூலம் உலக மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்து " அன்றைய "மருதநாயகம்" முதல் இன்றைய" ஜனநாயகம் தானா" வரை எத்தனையோ புரட்சிப்பாடல்களை ஆயிரக்கணக்கான பாடல்களை வீரமுழக்கமிட்டு அவர்களின் பாடல்கள் இசைத்தட்டின் வழியே நாட்டிலும் காட்டிலும் மேட்டிலும் , பட்டித்தொட்டிகளிலும் நாளெல்லாம் இசைத்துநிற்கக்காணலாம். மலேசியாவின் பல திருமணநிகழ்வுகளில் கச்சேரிகள் மூலம் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றியதுடன்,சிங்கப்பூர் ஹனிபா டெக்ஸ்டைல்ஸ், எஸ்.ஏ.மஜித் பிரதர்ஸ் ஆடியோ நிறுவனங்கள் நடத்திய மிகப்பிரமாண்டமான கச்சேரி நிகழ்வுகளில் பாடி தன்னுடைய புகழை நிலைநாட்டியவர்.
பலநாட்டு வானொலிகளில் இன்றும் இவருடையபாடல்கள் இசைப்பதைக்காணலாம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தாய்சபையில் தலைமைநிலையப்பாடகராக பல்லாண்டுக்காலமாக சேவைப்புரிந்துவரும் இவர், எண்ணற்றப்புரட்சிப்பாடல்களை கட்சிக்காகபாடி இக்கட்சியின் தேசியத்தலைவர் முனிருல்மில்லத் காதர்மொய்தீன் அவர்களின் அன்பினால் என்றும் பாராட்டப்படுபவர் மேலும் இக்கட்சியில் இராமநாதபுரத்தின் நகர்த்தலைவராகவும் விளங்குகிறார்.
தான்பாடிய பாடல்களால் இசைசேவை செய்துவரும் இவர் சமுதாயத்திற்கான பலநலப்பணிகளையும்,நகரில் உள்ள தமிழ்ச்சங்கம், கம்பன்கழகம், முத்தமிழ்மன்றம், நூலகவாசகர் வட்டம் போன்ற இலக்கிய நிகழ்வுகளிலும் பாடல்கள்பாடி அனைவரையும் பரவசம் அடையச்செய்தவர், இராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் இவரைப்பாராட்டி "இசைப்பணி விருதை " வழங்கியுள்ளது, மேலும் ஹைரதாபாத் தமிழ்ச்சங்கங்கத்திலும் கச்சேரிநடத்தியப்பெருமை உடையவர், இப்படிப்பட்ட பல்வேறுபணிகளில் தனிமுத்திரைப்பதித்து தான்பாடிய பாடல்களால் மக்களின் மத்தியில் ஏற்றத்தைப்பெற்ற முகவை தீன்சுடர் , தீனிசைப்பேரரசு ஹாஜி எஸ்.ஏ. சீனிமுகம்மது அவரகள்.
தகவல் ;- புலவர் அப்துல் மாலிக் -வாழூர்.
Comments
Post a Comment