தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின்
நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான
அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத்
தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில்
தொடங்கப்பட உள்ளது.பல நூறு ஆண்டுகளாக
மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய
முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதிகளில்
சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து
ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு
மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து
வருகின்றனர். மேலும் மார்க்க கல்வியை முழுமையாக
படித்து ஆலிம், ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள்
பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே
தொடர்கிறது. மலேசிய இந்திய முஸ்லிம்கள்
மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில்
பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி
திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல்
வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற
பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது.
இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட்டப்படி
முழுமையான பாடங்கள் நடைபெறும். முழுநேர அரபுக்
கல்லூரியான இதில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியின்
எல்லா கலையிலும் முழுமையாக கற்றுத்தேறி ஆலிம்
ஸனது (டிப்ளோமோ) பட்டம் வழங்கப்படும். ஆலிம்
பட்டம் பெறுவதுன் மூலம் அரபுக் கல்லூரிகளில்
பேராசிரியாக, மஸ்ஜிதுகளின் இமாமாக, மார்க்க
சொற்ப் பொழிவாளர்களாக பதிவு பெற்று உள்நாட்டிலும்,
வெளிநாட்டிலும் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
இறைப்பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த அறிய
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்
படுகிறார்கள். ஆரம்பமாக முதல் ஜும்ராவுக்கு
மாணவர்கள் பதிவு நடைபெறுகிறது.உங்களுக்கான
இடத்தை இப்போதே உறுதி செய்து கொள்ளுங்கள்.
இருக்க இடம்,உடுத்த உடை,உண்ண உணவு,படிக்க
கிதாபுகள் அனைத்தும், இலவசமாக அளிக்கப்படு
வதுடன்,கல்விக் கட்டணமும் கிடையாது என்பது
தனிச்சிறப்பு.மேலும் விபரங்களுக்கு 03-26921009,
0169276127. என்ற எண்களில் மலேசியத் தலைநகர்
மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்
மேலப்பாளையம் மௌலானா மௌலவி
அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் எஸ்,எஸ், அஹ்மது
ஆலிம் பாகவி ஃபாஜில் தேவ்பந் ஹஜ்ரத் கிப்லா
அவர்களை தொடர்பு கொள்ளலாம்.. வஸ்ஸலாம்….
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்
Comments
Post a Comment