கண்ணியத்திற்குரிய உலமாக்களின் மேலான கவனத்திற்கு!
1-இமாம்களின் அந்தஸ்த்தையும்,இமாமத்தைச்சார்ந்த சேவைகளையும் சிறப்பாக்கி கொள்ள கிறாஅத் முதல் இமாமத் கித்மத்திற்கு தேவையான அனைத்து மேம்பாட்டு பயிற்சிகளும்,வழிகாட்டல்களும்.
2-சிறந்த தலைப்புகளையும் அதற்கு பொருத்தமான தகவல்களையும் சேகரம் செய்து பயனுள்ள முறையில் சொற்ப்பொழிவு ஆற்றுவதற்கு தேவையான பயிற்ச்சிகள்.
3-ஆழமான கருத்தாய்வுகளைச் செய்து சீர்திருத்த கட்டுரைகளை வரைவதற்கான எழுத்துப்பயிற்சிகள்.
4-மஹல்லாவிலுள்ள சிறார் முதல் அனைத்து தரப்பினரின் மார்க்க கல்வி மேம்பாட்டுக்கு முறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல்கள்,பயிற்சிகள்.
5-மஹல்லா கட்டமைப்பும்,சகோதர சமயத்தவருடனான நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட தேவையான வழிகாட்டல்கள்,பயிற்றுவிப்புகள்
6-கம்யூட்டரை இயக்கிடவும்,குறைந்த செலவில் இண்டர்நெட் சென்டர்களை பயன்படுத்தி அதில் நிறைவாக வெளியிடப்பட்டிருக்கும் குர்ஆன் ஹதீஸ்,ஃபிக்ஹின் பரவலான தகவல்களை அறிந்து சுய நிலையில் மார்க்க ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும்,தற்கால சமூக தேட்டங்களுக்கு,ஈடுகொடுக்கும் வகையில் தீனின் சேவைகளை சிறப்பாக ஆற்றிடவும் தேவையான பயிற்சிகள்.
7-அரசின் சிறுபாண்மையினருக்கான உதவிகளை பெறுவதற்குறிய வழிமுறைகளை அறிந்து சமுதாயத்தினரால் தகுதி உள்ளவருக்கு அதனை அடையச்செய்ய தேவையான வழிகாட்டல்கள் பற்றி பயிற்சி.
இதுபோன்ற இன்னும் பல சிறந்த பயிற்சிகளும்,வழிகாட்டல்களும்,மர்கஜ் அல் இஸ்லாகில் வழங்கப்படுகின்றன.புதிதாக பட்டம் பெற இருக்கும் மௌலவிகளும்,சேவையில் ஈடுபட்டிருக்கும் சங்கைகுரிய உலமாக்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
6- வது, நாற்பது நாள் பயிற்சி வகுப்பு;-ஷஅபான் பிறை 16 (7-07-2012) முதல் ரமலான் பிறை 26 (15-08-2012) முடிய இன்ஷா அல்லாஹ் நடைபெற இருக்கிறது.
முழு (ஒரு) வருட பயிற்சி வகுப்பு;--ஷவ்வால் பிறை 17 (5-09-2012) புதன்கிழமை துவங்கப்பட இருக்கிறது இன்ஷா அல்லாஹ்.
(வழமைப்படியான) வருடம் முழுவதும் 40 நாள் (தொகுப்பு) பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து நடைபெறும்.
குறிப்பு;--40 நாட்கள் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து முழுமையாக பங்குபெறும் ஆலிம்களுக்கு ரூபாய் மூன்று ஆயிரம் ஹதியாவாக வழங்கப்படும்
தொடர்புக்கு--மர்கஜ் அல் இஸ்லாஹ்,186 நேரு வீதி,பாண்டிச்சேரி.605001
phone-0413-2334152, 94422-07864, Email-Markezalislah@gmail.com
வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்
நல்ல முயற்சி. நல்ல தகவல்
ReplyDeleteமிகவும் வரவேற்க வேண்டிய விஷயம் பொன்னான வாய்ப்பு இது, இதை மற்ற நகரங்களிலும் நடத்த முயற்சி எடுத்தால் பெருமளவில் உலமாக்கள் கலந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
ReplyDelete