நன்மைகளை அள்ளித் தரும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம்
- Get link
- X
- Other Apps
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் நல் அடியார்களே! நன்மைகளை கொள்ளை கொள்ளக்கூடிய,இன்னும் பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய,சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும்.1-இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும். 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும். 3- 20-ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 4-இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத்வைத்து நோன்பு வைக்க வேண்டும். 5- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும். 6-அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்கவேண்டும். 7-ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகைய பொருட்களை கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள், அல்லது தனது ஊரில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஜக்காத்து கொடுக்க வேண்டும். குறிப்பாக எந்த வழிகெட்ட கொள்ளைக்கூட்ட அமைப்புகளுக்கும் பத்து காசுகள் கூட கொடுக்கக்கூடாது 8- இப் புனிதம் நிறைந்த மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள், ஆண்கள் பள்ளி வாசல்களிலும், பெண்கள் வீடுகளிலும், இஃதிகாஃப் இருக்க வேண்டும்.9- ரமலான் பிறை 27-லைலத்துல் கத்ரு இரவில் விழித்து ஸுப்ஹு வரை நல் அமல்கள் அதிகமாக செய்ய வேண்டும்.10-பெருநாள் தினத்தன்று ஏழை வரியான ஃபித்ரா தொகைகளை தொழுகைக்கு செல்லும் முன் ஏழை,எளியவருக்கு வழங்கவேண்டும். அல்ஹம்துலில்லாஹ் குறைந்த பட்சம் மேலே கூறப்பட்டுள்ள அமல்களை பரிபூரணமாக, உலக முஸ்லிம்கள்அனைவர்களும் நிறைவேற்றி, புனிதம் நிறைந்த ரமலானின் முழுமையான, நன்மைகளை, உலகமுஸ்லிம்கள் அனைவர்களும் பெறுவதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் பெருங்கிருபை செய்வானாக என்றும், உலக முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் ரமலான் முபாரக் என்ற நல் வாழ்த்தினைக் கூறியும், சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும், சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அக மகிழ்ந்து வாழ்த்தி, துஆச் செய்கிறார்கள்.
புனிதம் வாய்ந்த ரமழான் மாத விசேட அறிவிப்புகள்;-
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான மூன் தொலைக்காட்சியில் புனித ரமலான் மாத சஹர் நேர நிகழ்ச்சி,சிறப்புமிகு அறிஞர் அரங்கம் தினமும் 3-30 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.அனைவரும் தவறாமல் பார்த்து அதன்படி நல் அமல்கள் செய்து,அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
குறிப்பு ;- புனித ரமலான் பற்றி தெளிவான விளக்கத்திற்கு www.jamalinet.com மற்றும் www.tmislam.com ஆகிய இணையதளத்தை பார்த்து பரிபூரண விளக்கம் பெறவும் வஸ்ஸலாம்.
வெளியீடு--மன்பஈ ஆலிம்.காம்
- Get link
- X
- Other Apps
ரமளான் மாத சிறப்பு கட்டுகரைகள் http://www.tntj.net/93972.html
ReplyDeleteரமளான் மாத சிறப்பு கட்டுகரைகள்
ReplyDelete