மும்பை ஹாஜி அலி தர்ஹா ஷரீஃப் !!!


முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

இது ஹாஜி அலி தர்ஹா. இது மும்பையின் தென்பகுதியில் 
வோலி குடாவிலுள்ள ஒரு தீவு திடலில் அமைந்துள்ளது. 
இந்து முஸ்லிம்களை இணைக்கும் பாலமாக இந்த 
தர்ஹா அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

.இதில் நல்லடக்கமாகி துயில்பவர்கள் ஸையுதுனா 
அஸ்ஸையித் பீர் ஹாஜி அலி ஷா புகாரி ரஹ்மதுல்லாஹி 
அலைஹி. இவர்கள் 15ம் நூற்றாண்டில் 
வாழ்ந்த மாபெரும் செல்வந்தர்.
.
எல்லாவற்றையும் துறந்து மக்கா மதீனா சென்று, 
புஹாரா சென்று புஹாரி நாயகத்தை தரிசித்து 
உலகின் பல பாகங்களுக்கும் சென்றவர். மீண்டும் 
மும்பை வந்து தவமியற்றி வாழும்போது சுகவீனமுற்றார்கள்.
.
தன் அன்பர்களிடம் தன்னை மக்கா - மதீனா கொண்டுப் 
போகும்படி வேண்டினார்கள். இடையில் நடுக்கடலில் இறையடி 
சேர்ந்தார்கள். எனினும் கடல் அலைகள் இவர்களை மீண்டும் 
இந்தத் தீவுத் திடலுக்குக் கொண்டு வந்து சேர்த்தன. 
அவ்விடத்திலேயே நல்லடக்கமாகி நல்லருள் வீசுகிறார்கள்.
.
இந்த தர்ஹாவின் சிறப்பம்சம் இந்த தர்ஹா கட்டப்பட்டுள்ள 
வெள்ளை மார்பில் கற்கள், ராஜஸ்தானிலிருந்து கொண்டு 
வரப்பட்டவை. இதே மார்பிலினால்தான் உலகப்பிரசித்தி 
பெற்ற தாஜ்மகாலும் கட்டப்பட்டுள்ளது.
.
இந்த தர்ஹாவையும், மும்பாய் கடலையும் ஒரு கிலோ 
மீட்டர் தூரமான அகலம் குறைந்த ஒரு பாலம் இணைக்கிறது. 
இதன் கராமத்து... கடல் வற்றுப்பெருக்குக்கு ஏற்ப இப்பாதை 
தர்ஹாவை நோக்கித் திறந்து மூடும். கடல் மூடியவுடன் 
தர்ஹா தனியாக கடலில் காட்சி அளிப்பது கண்கொள்ளாக் காட்சி.
.
இங்குள்ள அன்பர்களின் ஒன்றுபட்ட கோசம், 'ஹாஜி அலி 
மீது நாம் கொண்டுள்ள நேசம் எல்லா நிலையிலும் எங்களுக்குப் போதும்'
.
அல் பாத்திஹா: சூரா பாத்திஹா 1 முறை, சூரா இக்லாஸ் 3 முறை
.
நன்றி: Abdur Raheem Muhammad Jaufer


வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு