பெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி !!!


பெருநாளன்று மலாய் பெருமக்கள் குபூர் ஜியாரத் 
செய்வார்கள் இந்த நல்ல பழக்கத்தை சிலர் ஆட்சேபம் 
செய்து குறை கூறுகிறார்கள் இது சரியா ?
பதில்: மலாய் சகோதரர்களின் சிறந்த இந்த சுன்னத்தான 
காரியத்தை மறுப்பதற்கு ஷரீஅத்தில் எந்த முகாந்திரமும் 
இல்லை சியாரத் மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட 
ஒரு சுன்னத்_நபிவழியாகும்.
தொழக்கூடாத நேரம் உண்டு நோன்பு வைக்ககூடாத 
நாட்கள் உண்டு இதுமாதிரி சியாரத் செய்யக்கூடாத 
நேரமோ நாட்களோ ஷரியத்தில் இல்லாத போது 
பெருநாளன்று ஜியாரத் செய்யக்கூடாது என தடை 
செய்வதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
சியாரத் செய்யுங்கள் என்பது 
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்களின் உத்தரவு.இந்த உத்தரவுக்கு எதிரான எந்த 
கருத்தையும் யார் சொன்னாலும் அதை தூக்கி எறிந்து 
விடவேண்டும்.இன்னும் சொல்லப்போனால் பெருநாள் 
அன்று சியாரத் செய்வது சிறந்தது என்று சொல்ல வேண்டும்.
ஏனெனில் பெருநாள் என்றால் கொண்டாட்டம் எனக்கருதி 
ஆட்டம் பாட்டத்தில் நமது மக்கள் ஈடுபட்டு மார்க்க விரோத 
காரியத்தில் விழுந்து விடக்கூடாதுஎன்பதற்காக பெருநாள் 
சந்தோஷத்தை நல்ல படிப்பினை தரும் சுன்னத்தானம் 
சியாரத்தில் கழித்தால் அல்லாஹ்வை மறக்கச் 
செய்யும் ஆடம்பர ஆகாத காரியங்களை மக்கள் தவிர்த்து  
தவவாழ்வில் ஈடுபடுவார்கள் என்ற தொலை நோக்குப் 
பார்வையில் செய்யப்பட்ட சிறந்த தொரு ஏற்பாடாகும்.
பெருநாள் சந்தோஷ தினத்தில் மரணத்தை நினைவுகூறும் 
ஜியாரத்தில் ஈடுபடுத்தியது முன்னோர்களின் எவ்வளவு 
பண்பட்ட ஒரு செயல் இதை மறுப்பது மார்க்க விரோத 
காரியத்தில் கேளிக்கை கூத்துகளில் மக்களை கொண்டு 
போய் சேர்க்கும் என்பதை மறுப்போர் யோசிக்க வேண்டும்.
மங்களமான ஒருநாளில் அமங்களமான ஒரு காரியத்தில் 
ஈடுபடலாமா எனக்கேட்பது அறியாமையாகும்.ஏனெனில்  
சுன்னத்தான ஒருஅமலை அமங்களம் என்று சொன்னது 
எவ்வளவு அபத்தம்.நிறைவாக சியாரத் எந்தநாளும் 
எந்தநேரமும் செய்யலாம் என்பது மட்டுமல்ல செய்யவேண்டும் 
வாழும் உறவுகளை சந்தித்து வாழ்த்துகள் சொல்லும் பெருநாளில் 
மறைந்து வாழும் உறவுகளை குபூருக்கு தேடிச்சென்று  ஜியாரத் 
செய்வது மலாய்காகாரர்களின் நன்றி விசுவாசத்தை 
வெளிப்படுத்துகிறது.நீங்கள் மரணித்தாலும் உங்களை 
மறக்கமாட்டோம் உங்களுக்கு துஆச்செய்வோம் என்ற 
முஸ்லிம்களின் பண்பாடு எவ்வளவு உயர்ந்தது இதை 
மறுப்பவர்கள் நன்றி கெட்டவர்கள் அ ல்லாஹ் 
நன்கறிந்தவன்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு