மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம்!!!

               
பிஸ்மிஹி தஆலா

மஸ்ஜித், மத்ரஸா,ஷரீஅத்கோர்ட், இஸ்லாமிய நூலகம் & ஆய்வு  மையம் மீட்டிங்ஹால், தங்கும் அறைகள், அனைத்தும் அமைந்த 5 அடுக்குகள் கொண்ட தலைமையகக் கட்டிடம்

 கட்டிடப் பணிகள் நிறைவு பெற இருக்கின்றன 
 நிறைவு செய்திட மனமுவந்து நிதி அள்ளித் தாரீர்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை வேண்டுகோள் !


அல்லாஹ்வின் பேரருளால் தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்காக 1956 –ல் உலமாக்களால் உருவாக்கப்பட்ட சமுதாய அமைப்பு தான் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையாகும்.பொன்விழா காலத்தை அடைந்த நம் மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு இது வரை சொந்தமான தலைமையகக் கட்டிடம் இல்லை.வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிப் பெற்ற இக்காலத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் சேவைகளும் செய்திகளும் நம் மக்களை விரைவாக சென்றடையவும், ஜமாஅத்துல் உலமா சபை தன் நோக்கங்களிலும், லட்சியங்களிலும் வெற்றி பெறுவதற்கும், தனது பணிகளை பரவலாக்கி மக்கள் பயன் பெறும்படி செய்வதற்கும் ஓர் தலைமையகக் கட்டிடம் கட்டுவது 
இக் காலத்தின் கட்டாயமாகும். 
இதனை  தீட்சண்யமாக  உணர்ந்தாலோ என்னவோ  மதுரை  மாநகரில் வசித்து வந்த T.S.N.M.S.A.P.M     முஹம்மது முஸ்தபா ஹாஜியார் அவர்கள் ,37 –ம் வயதில் மரணமாகி விட்ட தனது மருமகன் N. அப்துர் ரஜ்ஜாக் M.A.B.L அவர்களின் ஈசாலே சவாபுக்காக மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு 1974 –ல்  11 சென்ட் காலியிடத்தை மாநில ஜமாஅத்துல் உலமா சபை,  தான் விரும்பிய படி கட்டிடம் கட்டிக் கொள்வதற்கு  என்று வக்ஃப் செய்துள்ளார்கள். அல்ஹம்து லில்லாஹ் !

அந்த காலி இடத்தில் தான் தற்போது மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகம் கட்டும் பணி துவங்கி வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது.
 தலைமையக கட்டிடத்தின் விபரங்களும், அதன் நோக்கங்களும்.

அன்டர் கிரவுண்ட் (கீழ்தளம்)
 மாபெரும் நூலகமும் மற்றும் இஸ்லாமிய சட்டங்களின் ஆய்வு மையமும்;
குர்ஆன், ஹதீஸ், தஃப்ஸீர், ஃபிக்ஹு வரலாறு போன்ற பல்வேறு கலைகளில் வெளிவந்துள்ள லட்சக்கனகாண அரபி மற்றும்  உர்தூ தமிழ் மொழிகளிலுள்ள வியத்தகு நூல்கள் அடங்கிய மகத்தான நூலகம் இன்ஷா அல்லாஹ் அதில் அமைக்கப்படும். மேலும் இது இஸ்லாமிய மார்கக் சட்டங்களின் ஆய்வுமையமாகவும் செயல்படும்.தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த திறமையான ஆலிம்கள் குழு இதில் பணியாற்றுவார்கள்

குழுவின் பொறுப்புகள்!

இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் கருத்துக்களுக்கு இன்ஷா அல்லாஹ் உடனுக்குடன் பதில் தருவது.தேவையான நவீன மஸாயில்களை ஆய்வு செய்து ''ஃபத்வா'' வழங்குவது.மக்தப் மத்ரஸாக்களுக்கான பாட திட்டம் தயாரித்தல்.
தமிழகத்திலுள்ள மஸ்ஜிதுகள்,மத்ரஸாக்கள், மக்தப் பாட சாலைகள் அனைத்தையும் கணக்கெடுத்தல். 

தமிழகத்திலுள்ள வக்ஃபு சொத்துகளின் நோக்கங்களை கண்டறிந்து வாகிஃபின் (வக்ஃபு செய்தவரின்). நோக்கங்களுக்கு ஏற்ப செலவிட தூண்டுதல்.
தமிழகத்தில் உள்ள அனைத்து வக்ஃபு சொத்துகளுக்கும் கால நிலைக்கேற்ப இன்றைய மார்க்கெட் நிலவரப்படி நியாயமான வாடகைகள் கிடைக்க மஸ்ஜித், மத்ரஸாக்களின் நிர்வாகிகளோடு இணைந்து அதிவேகமாக பாடுபடுதல்.

பட்டம் பெற்று வரும் உலமாக்களுக்கு பயிற்ச்சி அளித்தல்.
அரபி மற்றும் உர்தூ கிதாபுகளில் புதைந்து கிடக்கின்ற இஸ்லாமிய ஞானங்களை மொழி பெயர்த்து தமிழக மக்களுக்குத் தருவது.நாம் பெற்ற ஹிதாயத் (நேர்வழி) எல்லா மக்களுக்கும் கிடைக்க இஸ்லாமிய அழைப்பு  (தஃவா) பணி செய்வது, இன்னும் இது போன்ற பல்வேறு நற்பணிகள் 
செய்வது இக்குழுவின் பொறுப்புகளாகும்

முதல் தளம்; 

ஆஃபீஸ் ரூம் மற்றும் மீட்டிங் ஹால்;

சமுதாய பிரச்சினைகள் சம்மந்தமாகவும், கால நிலைக்கேற்ப செய்ய வேண்டிய சேவைகள் பற்றியும், ஆலோசிப்பதற்காக மீட்டிங் ஹால்,இதில் மாதம் ஒரு முறை நிர்வாகக் குழு கூட்டமும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உயர்மட்டக்குழு கூட்டமும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயற்குழு கூட்டமும்,வருடத்திற்கு இரண்டு முறை பொதுக்குழு கூட்டமும், வருடத்திற்கு ஒரு முறை மகா சபைக் கூட்டமும் இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.

முதல் மாடி ;    தங்கும் அறைகள் கட்டி வாடகைக்கு விடுதல்

இரண்டாவது மாடி

சபையின் நிர்வாகச் செலவினங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் வகையில், மதுரைக்கு வரும் வெளியூர் வாசிகளான நம் சமுதாய பெருமக்கள் தங்குவதற்கான தங்கும் அறைகள் கட்டி வாடகைக்கு விடுவது. மேலும் மீட்டிங் இல்லா நேரத்தில் மீட்டிங் ஹாலையும் திருமணம் மற்றும் இதர விஷேசங்களுக்கும் வாடகைக்கு விடுதல்.

மூன்றாவது மாடி; 

மஸ்ஜித்,ஹிப்ளு மத்ரஸா மற்றும் ஷரீஅத் கோர்ட்
முஸ்லிம்கள் தமது குடும்பப் பிரச்சணைகளுக்காக கோர்ட்டுக்கு சென்று பணங்களையும், காலங்களையும், பாழ்படுத்தாமல் இருக்க,குடும்ப பிரச்சனைகளை மார்க்க அடிப்படையிலும் சுமூகமான முறையிலும் தீர்த்துக் கொள்வதற்கு ஷரீஅத் கோர்ட் அமைத்து செயல்படுதல். மேலும் எந்த நேரமும் இபாதத் (வணக்கம்) நடைபெறும் வகையில் அல்லாஹ்வின் கலாமை ஓதிக் கொண்டிருக்க ஓர் ஹிஃப்ளு (குர்ஆன் மனன) மத்ரஸா நடத்துவது, மாணவர்களும் மற்றவர்களும் தொழுவதற்கு ஓர் மஸ்ஜித் ஏற்படுத்துதல், இவைகள் தான் தலைமையக கட்டிடத்தின் நோக்கங்களாகும்.

எனவே, இதுபோன்ற பல்வேறு சேவைகள் செய்திட மதுரை மாநகரில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைக்கு தலைமையகக் கட்டிடம் கட்ட நாடி அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இப் பணியை  பூர்த்தி செய்ய இருக்கிறோம்.
சமுதாய சான்றோர்கள் இக் கட்டிடம் கட்டி முடிக்க தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்திய மக்களுக்கும் மகத்தான சேவைகள் செய்யும் கேந்திரமாகத் நம் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை திகழவும் தாங்கள் அனைவரும் துஆச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.வஸ்ஸலாம்.
                
தங்களன்புள்ள.


M.O அப்துல் காதிர் தாவூதி
பொதுச்செயலாளர்
தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
          
நிதி உதவிகள் செய்ய அனுக வேண்டிய முகவரி
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
மௌலானா மௌலவி
A.E.M. அப்துர் ரஹ்மான் ஹள்ரத்
CELL; 9843689800 , 9360394875

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு