-; பயனுள்ள தொலைக்காட்சி ;-
பிஸ்மிஹி தஆலா
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மூன் தொலைக்காட்சி
மிகவும் சிறப்பு வாய்ந்த மிகப் பெரிய சேவையை வழங்கிக்
கொண்டிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ் சமீப காலமாக
தமிழகத்தில் வழி கெட்ட தீய சக்திகள் தனது வழிகெட்ட
தவறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்கி
இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகேட்டின் பக்கம்
அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வழிகேடானா
பிரச்சாரங்களுக்கு மத்தியில் மக்களுக்கும், வழிகேட்டில்
மூழ்கி கெடக்கும் வாலிபர்களுக்கும் உண்மையை தெளிபடுத்து
வதற்காக, மூன் தொலைக்காட்சி தனது பணியை செவ்வனே
செய்து கொண்டிருக்கிறது. இத்தொலைக்காட்சியில் அதிகாலை
முதல் நள்ளிரவு வரை அதிகமான சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள்
அரபுநாடுகள், இலங்கை, மற்றும் இந்தியா முழுவதும்
வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிகள் சிறந்த காரீகளால் கிராஅத்
ஓதப்பட்டு துவக்கம் செய்யப்படுகிறது. 1 வது இன்று ஒரு நபி
மொழி என்ற நிகழ்வை மௌலானா மௌலவி ஹஜ்ரத்
ஸாலிஹ் சேட் ஆலிம் பாகவி அவர்களும், 2 வது சிந்திப்போமா
என்ற நிகழ்வை மௌலானா மௌலவி ஹஜ்ரத் மன்சூர்
ஆலிம் காஷிஃபி அவர்களும், 3 வது மழலையர் இஸ்லாம்
என்ற சிறு குழந்தைகளுக்கான நிகழ்ச்சியும், 4 வது குர்ஆன்
ஷரீஃப் ஓதத் தெறியாதவர்களுக்கு முக்கிய சொத்தாக எளிய
முறையில் திருக்குர்ஆன் கற்ப்போம் என்ற நிகழ்வை ,
மௌலானா மௌலவி ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது ஆலிம்
மன்பயீ அவர்களும் 5 வது கி.பி 570- வது முதல் இஸ்லாமிய
வரலாறு ஆய்வு என்ற நிகழ்வை வரலாற்று ஆய்வாளரும்,
காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி
முதல்வரும், கதீப் ஹஜ்ரத் மௌலானா மௌலவி
அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம்
மஹ்ழரி அவர்களும், 6 வது இஸ்லாமிய கீதம் தேரிழந்தூர்
ஹாஜி தாஜூத்தீன் ஃபைஜி அவர்களும் 7 வது உலகம் உங்கள்
கையில் என்ற நிகழ்வை பேராசிரியர் டாக்டர் சே,மு,த,த,
முஹம்மது அலி, அவர்களும், 8 வது இணையில்லா
இறைமறை என்ற திருக்குர்ஆன் விளக்கவுரையை காயல்
பட்டிணம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ
அல்ஹாஜ் சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்களும்,
9 வது கிராஅத்துல் குர்ஆன் போட்டி என்ற நிகழ்வை
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ ஆஸிக் அஹ்மது
ஆலிம் தாவூதி மற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ
முஹம்மது இஸ்ஹாக் ஆலிம் பிலாலி அவர்களும், 10 வது
ஷரீஅத் சட்டம் என்ற நிகழ்வை பெரம்பூர் மஸ்ஜிதுர் ரஹ்மான்
பெரிய பள்ளி தலைமை இமாமும், சென்னை பல்கலை கழக
அரபி, உருது, பாரசீகம் விரிவுரையாளர் டாக்டர் மௌலானா
மௌலவி அல்ஹாஜ் அன்வர் பாதுஷா ஆலிம் உலவி அவர்களும்
11 வது தீன் ஒலி என்ற சிறப்பு நிகழ்வை சுன்னத் வல் ஜமாஅத்
ஐக்கியப் பேரவை தலைவரும்,ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக்
கல்லூரி முதல்வர், அபுத்தலாயில், மௌலானா மௌலவி
அல்ஹாஜ் ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி அவர்களும்
12 வது இறைவனிடம் கையேந்துங்கள் என்ற சிறப்பு பிரார்த்தனை
நிகழ்வை மௌலானா மௌலவி ராஃபிஃ ஆலிம் மஹ்ழரி
மற்றும் ரஹீம் ஃபைஜி அவர்களும், 13 வது சின்ன பாப்பா
பெரிய வாப்பா என்ற அழகிய நிகழ்வை அல்ஹாஃபிழ்
ஸதக்கத்துல்லாஹ் அவர்களும், 14 வது வளைகுடா செய்திகளும்
இன்னும் பல அறிய நிகழ்ச்சிகளையும் தொடராக வழங்கிக்
கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமிய சகோதர சகோதரிகளே
மார்க்கத்தை முறையாக அறிய வேண்டுமென்றால் மற்ற
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அறவே பார்க்காமல், மூன்
தொலைக்காட்சியை பார்த்து பரிபூரண விளக்கம் பெறுங்கள்.
அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் கிருபை செய்வானகவும்.
மேலும் இச்சிறப்பு மிகு தொலைக்காட்சியின் உரிமையாளர்,
மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், இன்னும் மூன் தொலைக்காட்சி
உலமாக்கள் குழுவினருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்
நோய் நொடி இல்லா நீண்ட ஆயுளை வழங்கவும் சுன்னத்
வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினர்
அகமுவந்து வாழ்த்தி இருகரம் ஏந்தி துஆச்செய்கிறார்கள்.
வஸ்ஸலாம் ஆமீன்….
வெளியீடு;-
மன்பயீ ஆலிம்.காம்
Comments
Post a Comment