Posts

Showing posts from 2012

இப்போதைக்கு உலகம் அழியாது!

Image
மாயன் இன காலண்டர்.இதுதான் இப்போது உலகெங்கிலும் பேச்சு.மத்திய அமெரிக்காவில் கி.மு.2600 க்கும் கி.பி.900 த்திற்கும் இடையில் வாழ்ந்த ஒரு முன்னேறிய சமூகம் மாயன் இனம்.தொண்மையான நாகரிகத்தைக் கொண்ட இந்த இனம்,கட்டிடக் கலை,வானவியல்,நாள்காட்டித் தயாரித்தல் போன்ற துறைகளில் திறமையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். சூரிய,சந்திர நகர்ச்சியைக் கணக்கிட்டு இரண்டு காலண்டர்கள் தயாரித்து நடைமுறையில் வைத்திருந்தினர்.ஒன்று ஒரு வருடத்திற்கு 360 + 5 நாட்கள்,18 மாதங்களை கொண்டது.இன்னொன்று,ஒரு வருடம் என்பது 260 நாட்கள்,13 மாதங்களாகும்.ஒருமாதம் என்பது இவர்களிடம் 20 நாட்களாகும்.இந்த மாயன் இன காலண்டர்,21,12,2012 என்ற தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தினத்தோடு -- அதாவது இன்றோடு இந்த உலகம் அழிந்துவிடும் என புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இந்த மூட நம்பிக்கையினால் ஒரு பக்கம் பீதியும்,மறுபக்கம் பிராத்தனை,பாதுகாப்புச்சாதனங்கள் என வியாபாரமும்,சூடுபிடித்துள்ளது.மத அடிப்படையும்,தெளிவும் உள்ளவர்களுக்கு இதில் எந்தக்குழப்பமும்,பயமும் இப்போதும்,எப்போதும் இருந்ததில்லை.இந்த உலகம் முடிவில் ஒருநாள் அழிந்து போகும்.இத...

ஒடுக்கத்து புதனுடைய முக்கியத்துவம் (ஸஃபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமை)

Image
நக்சபந்திய்யா தரீக்காவின் பிரபலமான தலைவர் இமாம் ஷைகு ஃபரீதுத்தீன் (ரலி) அவர்கள் பின் வருமாறு அறிவிக்கிறார்கள்.ஸஃபர் மாதத்தின் கடைசிப்புதன் கிழமையன்று (இதை நமது மக்கள் ஒடுக்கத்துப் புதன் என்பார்கள்) உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் வியாதிகளும், முஸீபத்துகளும் இறங்குவதாகவும்,அந்த நாளில் பின் வரும் ஸலாமத்துடைய ஏழு ஆயத்துகளையும் பீங்கான் பாத்திரத்தில் அதற்கான விஷேச மைய்யினால்) எழுதித் தண்ணீர் விட்டுக் கரைத்து குடித்தால் அந்த முஸீபத்துகளிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் எனவும் அறிவிக்கிறார்கள்.  (ஓதிய நீரை குடித்துவிட்டு நக்சபந்திய்யா ஷைகுமார்கள் மீது ஃபாத்திஹா ஓதிக்கொள்ளவும்) அதோடு பின் வரும் துஆவையும் ஒரு முறை ஓதுவது நல்லது. (1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58) (2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79) (3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109) (4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120) (5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130) (6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73) (7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97...

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 11 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த பொன்னான மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 1487 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் வருகிற 12--01--2013 சனிக்கிழமை தொடங்கி 23--01--2013 புதன்கிழமை வரை 12 தினங்களுக்கு இஷா தொழுகைக்குப் பின் சரியாக ஒரு மணி நேரம் பயான் நடைபெறும். உரையாற்றுபவர்கள் ;--- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் H.அப்துர் ரஹ்மான் ஃபாஜில் பாக்கவி,M.A பேராசிரியர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா -- அரபுக் கல்லூரி,நீடூர்,மயிலாடுதுறை. ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்ப்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்...

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்

Image
                    ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா  நிகழ்வு குறித்த சிறப்புக் கூட்டம்  மன்பவுல் அன்வார் தாருல் ஹதீஸ் வளாகத்தில்  ஜாமிஆ முதல்வர் மௌலானா ஏ. நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமையில் 24.12.2012 காலை நடைபெற்றது  செயலாளர் ஹாஜி பி.எம். முஹமத் யஹ்யா பொருளாளர் ஹாஜி ஜபார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரி   முகமத் அஹமத் ஹஜ்ரத் இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார் இந்த சிறப்புக் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. *ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா  & பட்டமளிப்பு விழா    2013 ஜூன் 22,23.ஆகிய இரண்டு நாட்கள் நடத்துவது . * விழாவிற்க்கு சமுதாய அரசியல் கட்சி தலைவர்களை அழைப்பது . * ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்...

கலங்கரை விளக்கம் அல்லாமா கலந்தர் மஸ்தான் ஹஜ்ரத் கிப்லா!

Image
வியாழக்கிழமை காலை (20-12-2012) அன்று  அலுவலகம் வந்த உடனே தொலைபேசி வந்தது, இடியென என் நெஞ்சிற்கு செய்தியொன்றும் தந்தது அது நம் நெஞ்சுக்குகந்த பெருமேதை, நாநிலமறிந்த மார்க்க வல்லுநர், தமிழ் இஸ்லாமிய சமூகத்தின் கலங்கரை விளக்கம் மெளலவி எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சென்னையில் அதிகாலை 2.30 மணி அளவில் ஏகனளவில் ஏகிவிட்டார்கள் என்பது தான், தொலைபேசியில் ஒளித்த குரல் மிக வருத்தப்பட்டு சொன்னது தமிழகத்தில் எத்தனையோ மார்க்க மேதைகள் இருந்தாலும் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும், திருச்சி ரப்பானி ஹஜ்ரத் அவர்களும் பிரதான அறிஞர்களின் மகுடமாக திகழ்தார்கள் ஊருக்கு சென்றால் மனதார பல மார்க்க விளக்கங்களை கேட்டு மன அமைதியடைந்து வருவோம் அவர்களில் ரப்பானி ஹஜ்ரத்தை தொடர்ந்து நம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்களும் இறையடி சேர்ந்து விட்டார்களே இனி நாம் ஊருக்கு சென்றால் இது போன்ற மாமேதை யாரை காண்போம்.. என தன் அங்கலாய்ப்பை சொல்லி புலம்பி அழுதார்! அவர் சொன்னது மிக உண்மை தான் தமிழகத்தின்   பெரும்பகுதி   மக்களுக்கு   இஸ்லாமிய மார்க்க   கருத்தின் ஆழிய கருத்துக்களை அபூர்வ விளக்கங்கள் கொட...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு