சித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனரின் இல்லத் திருமண விழா

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!!!

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
ஆதிமுதல் அந்தம் வரை அனைத்தையும் படைத்துப் பரிபாலித்து வரும் அல்லாஹ்வின் அருளாலும், அஞ்ஞான இருள்நீக்கி மெஞ்ஞான ஒளிதந்த, அண்ணல் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நல்லாசியாலும்,பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ்,வலிமார்கள்,நாதாக்கள்,நல்லோர்கள் துஆபரக்கத்தாலும், ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-09-2012) ஞாயிற்றுக்கிழமை காலை 10-30 மணிக்கு முபாரக்கான வேலையில்,

சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில், அல்ஹாஜ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகன் தீன்நிறைச்செல்வன் அல்ஹாஜ் S.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அல்ஹாஜ் M.சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.ஐனுல் மர்லிய்யா ஆகியோரது நிக்காஹ் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது
.

காலை 10-மணிக்கு நடைபெற்ற நிக்காஹ் மஜ்லிஸிற்கு லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியரும்,தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவருமான,மௌலானா மௌலவி அல்லாமா,அல்ஹாஜ்,அபுல் பயான், ஷைகுல் ஹதீஸ், A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமை தாங்கி,சிறப்புப்பேருரையாற்றினார்கள். சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வரும்,பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான  அல்லாமா கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் நிக்காஹ் குத்பா ஓதினார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட ஃபத்வா கமிட்டித் தலைவர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ அல்ஹாஜ்,அல்லாமா அஹ்மது இப்றாஹீம் ஆலிம் ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள், மணமக்களை வாழ்த்தி துஆ ஒதினார்கள். சித்தார்கோட்டை ஜன்னத்துல்  ஃபிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,காரீ அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஈஜாப் கபூல் செய்து வைத்து அனைத்து நிகழ்ச்சிகளையும்,தொகுத்து வழங்கினார்கள்.

ஹிஜ்ரி 1433ஆம் வருடம் ஷவ்வால் பிறை 21 (9-9-2012) ஞாயிற்றுக் கிழமை அஸர் தொழுகைக்குப்பின் முபாரக்கான வேலையில் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதில்,வாழூர் டாக்டர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் அன்புமகன் தீன்நிறைச்செல்வன் R.முஹம்மது யூசுப், மௌலானா மௌலவி அல்ஹாஜ் I.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்களின் அன்பு மகள் தீன்நிறைச்செல்வி S.நுஸ்ரத் பாத்திமா ஆகியோரது நிக்காஹ் மஜ்லிஸும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற நிக்காஹ் மஜ்லிஸில்,சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வரும்,பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வருமான  அல்லாமா கே.எம்.அஷ்ரஃப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் நிக்காஹ் குத்பா ஓதினார்கள். சித்தார்கோட்டை ஜன்னத்துல்  ஃபிர்தௌஸ் ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,காரீ அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஈஜாப் கபூல் செய்து வைத்து, அனைத்து நிகழ்ச்சிகளையும்,தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாம், மௌலானா மௌலவி K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி அவர்கள், மணமக்களை வாழ்த்தி துஆ ஓதினார்கள்.உள்நாடு மற்றும், வெளிநாடுகளிலிருந்தும்,ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி துஆச்செய்தார்கள்.

இம்மணமக்கள் எல்லா வளமும்,நலமும் பெற்று,நபிமார்கள்,இமாம்கள்,அவ்லியாக்கள்,ஸாலிஹீன்கள் எவ்வாறு வாழ்ந்தார்களோ அது போன்று பல்லாண்டு காலம் வாழ,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர் அகமுவந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்...

வெளியீடு;- மன்பயீ ஆலிம்,காம்

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு