ஸலாமை -- சமாதானத்தை பரப்புங்கள்!
ஹளரத் அப்துல்லாஹ் பின் ஸலாம் (யூத மத அறிஞராக இருந்து இஸ்லாத்தை தழுவியவர்.இவர் இஸ்லாமை ஏற்பதற்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அறிவிக்கின்றார்கள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திரு மதினா நகர் வந்து சேர்ந்தபொழுது அவர்களைக்காண நான் வந்தேன். திரு நபி (ஸல்) அவர்களின் திருமுகத்தை நான் தெளிவாக பார்த்த போது அந்த முகம் பொய் முகமன்று என விளங்கிக்கொண்டேன். அவர்கள் வந்ததும் பேசிய முதல் பேச்சு, '' மக்களே! ஸலாமை பரப்புங்கள்.உணவளியுங்கள். உறவினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.மக்களெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கையில் இரவில் எழுந்து தொழுங்கள்.(ஒரு பாதிப்பும் இல்லாமல்) ஸலாமத்தான முறையில் (பத்திரமாக) சொர்க்கம் பிரவேசிப்பீர்கள் '' (திர்மிதி ; 2485 இப்னுமாஜா ; 3251) அல்லாஹ்வின் தூதர் புனித மக்காவிலிருந்து புனித மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது அங்குள்ள மக்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் எல்லோரும் சேர்ந்து நபிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். இந்த வரவேற்பை ஏற்று,ஏற்புரை நிகழ்த்திய போது தான் மேற்கண்டவாறு பேசினார்கள்.இது நபி (ஸல்) அவர்களின் கண்ணிப்பேச்சு, திரு மதினாவுக்கு ...