இப்போதைக்கு உலகம் அழியாது!
மாயன் இன காலண்டர்.இதுதான் இப்போது உலகெங்கிலும் பேச்சு.மத்திய அமெரிக்காவில் கி.மு.2600 க்கும் கி.பி.900 த்திற்கும் இடையில் வாழ்ந்த ஒரு முன்னேறிய சமூகம் மாயன் இனம்.தொண்மையான நாகரிகத்தைக் கொண்ட இந்த இனம்,கட்டிடக் கலை,வானவியல்,நாள்காட்டித் தயாரித்தல் போன்ற துறைகளில் திறமையுள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். சூரிய,சந்திர நகர்ச்சியைக் கணக்கிட்டு இரண்டு காலண்டர்கள் தயாரித்து நடைமுறையில் வைத்திருந்தினர்.ஒன்று ஒரு வருடத்திற்கு 360 + 5 நாட்கள்,18 மாதங்களை கொண்டது.இன்னொன்று,ஒரு வருடம் என்பது 260 நாட்கள்,13 மாதங்களாகும்.ஒருமாதம் என்பது இவர்களிடம் 20 நாட்களாகும்.இந்த மாயன் இன காலண்டர்,21,12,2012 என்ற தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த தினத்தோடு -- அதாவது இன்றோடு இந்த உலகம் அழிந்துவிடும் என புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இந்த மூட நம்பிக்கையினால் ஒரு பக்கம் பீதியும்,மறுபக்கம் பிராத்தனை,பாதுகாப்புச்சாதனங்கள் என வியாபாரமும்,சூடுபிடித்துள்ளது.மத அடிப்படையும்,தெளிவும் உள்ளவர்களுக்கு இதில் எந்தக்குழப்பமும்,பயமும் இப்போதும்,எப்போதும் இருந்ததில்லை.இந்த உலகம் முடிவில் ஒருநாள் அழிந்து போகும்.இத...