Posts

Showing posts from January, 2013

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்ற மகத்தான வெற்றி!

Image
இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை.இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.)HISTORICALLY IT IS GUITE DOOB FULL WHETHER CHRIST EVER EXISTED AT ALL.(B.RUSSELL) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.  நபி (ஸல்) அ...

' மூச்சடங்கிய கம்பீரம்'

Image
மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா மறைவு. SSK என்ற மூன்று எழுத்துகளில் பிரபலமாக அறியப்பட்ட முதுபெரும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலானா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள், ஸஃபர் பிறை 5 (20.12.2012) வியாழன் அன்று மறைந்தார். ஓரிரு வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும்,இயலாமைக்கு ஆளாகிய இறுதி நிமிடம் வரை இஸ்லாமிய மார்க்க மேடைகளில் சங்கநாதம் செய்து கொண்டிருந்த, கம்பீரக் குரலுக்கும்,தோற்றத்திற்கும்,வாழ்விற்கும் சொந்தக்காரரான அவர்,பன்முக ஆற்றல் கொண்டவர். தஞ்சை மாவட்டம்,கிளியனூரில் பழமையான ' ரஹ்மானிய்யா ' அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய சமயக் கல்வியில் மௌலவி -- ரஹ்மானி' பட்டம் பெற்ற அவர்,கடையநல்லூர் அருகிலுள்ள 'பாம்புக் கோவில் சந்தை' என்ற கிராமத்தில் இமாமாக தன்னுடைய மார்க்க சேவையைத் தொடங்கினார். பின்னர் இரண்டு வருடம் நெல்லை பேட்டையில் உள்ள 'ரியாழுல் ஜினான்' அரபுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு,1970 இல் காயல் பட்டினத்திலுள்ள புகழ் பெற்ற 'மஹ்ழரா'  அரபுக் கல்லூரியில்...

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் 1487 வது மீலாது விழா

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! முஸல்லியன்!!!!வ முஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு தினங்களும் பயான் செய்யப்படும், ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினா...

தவறு செய்யனுமா? தாராளமாக! ஆனால்....?

Image
பல்கு நாட்டுப் பேரரசராக இருந்து முடி துறந்த இறை ஞானி இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வழிகெட்ட ஒரு இளைஞன் வந்து,நான் வரம்பு மீறி விட்டேன்.பல பாவச் செயல்கள் புரிந்து விட்டேன் அதற்காக இப்போது மனம் வருந்துகிறேன். ஆனால் பாவத்தை விட்டும் விலகி வாழ வழி தெரியாமல் வகையற்று உ ங்கள் முன் வந்து நிற்கிறேன்.நான் திருந்தி வாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார். அதற்கு ஞானி மகான் அருளிய உபதேசம் இதோ.நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால்,தாராளமாக நீ தவறு செய்யலாம்.முதலாவது '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்க் -- உணவு எதையும் சாப்பிடாதே!'' இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவ்வாலிபன், '' அது எப்படி முடியும்? எது சாப்பிட்டாலும் அது அவனுடைய ரிஸ்க் -- உணவுதானே! அப்படியானால் அவனுடைய உணவையும் உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா? உண்ட வீட்டுக்கு இது இரண்டகமல்லவா? ''  ஆம்!  நியாயமில்லைதான். இரண்டாவது உபதேசத்தைக் கூறுங்கள்''. '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் -- இடத்திலும் தங்காத...

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்!

Image
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்  சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔ அது குறித்து ஒரு கட்டுரை:  (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும்  அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று' ' (புஹாரி. முஸ்லிம்) அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்? அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான். إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا))  [رواه البخاري ح100، ومسلم 267...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு