அவசரம் ஆபத்தானது !!
அவசரம் என்பது ஒரு பொருளை அதற்குரிய நேரம் வருவதற்கு முன்பு தேடுவதும் அதைப்பெற முயற்சிப்பதுமாகும். விளங்காமல் பேசுவது புரியாமல் பதிலளிப்பது அனுபவப்படுவதற்கு முன்பு ஒரு ஆளைப் புகழ்வது புகழ்ந்தபின் பழிப்பது. இதுவெல்லாம் அவசரத்தால் விளையும் அபத்தங்களாகும். " நிதானம் அல்லாஹ்வினால் வருவது. அவசரம் ஷைத்தானால் விளைவது " (நபி மொழி- முஸ்னது அபீயஃலா. 4256) ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. அதனால் தான் " நீதிபதி கோபத்தில் இருக்கும் போது தீர்ப்பளிக்க வேண்டாம் " எனக்கூறினார்கள் நபிகள் நாயகம் (ஸல்) (புகாரி ; 7158 - முஸ்லிம் ; 1717) பதறாத காரியம் சிதறாது. எனவே பதறினால் எந்தக் காரியமும் சிதறிவிடும் '' கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் '' எனவே எதைப் பற்றியும் எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசவோ வெடுக் வெடுக் என அவசரப்பட்டு எந்த முடிவும் எடுப்பதோ கூடாது. '' நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியை கொண்டுவந்தால் , ( அதன் உன்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரனை செய்து ...