Posts

Showing posts from April, 2013

சென்னை -- திருவல்லிக்கேணி வட்டார ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்தும் மாபெரும் இரண்டு நாள் மாநாடு.

Image
நவீன உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாமே தீர்வு ஜமாஅத்துல் உலமா மாநாடு. இன்ஷா அல்லாஹ், நாள் ; ஏப்ரல் 27, 28 -2013 சனி, ஞாயிறு. இடம் ; குராசானி பீர் தர்ஹா மஸ்ஜித்,  L.B.ரோடு,அடையாறு,சென்னை --20. முதல் அமர்வு ; 9.30 - 1.00  பல்துறை ஆலிம்களின் அனுபவங்களும்,வழிகாட்டுதல்களும். ஆலிம்களுக்கு மட்டும். தலைமை ; மௌலவீ,அல்ஹாஜ் Dr.P.சையது மஸ்வூது ஜமாலி MA.,Ph.D வரவேற்புரை ; மௌலவி,அல்ஹாஜ்,K.M.அபூதாஹிர் ஸிராஜீ வழிகாட்டுரை வழங்குவோர் ; மௌலவி அல்ஹாஜ், Y.அப்துல் கரீம் ஜமாலி ( Ex.தமிழக அரசு மாவட்ட வருவாய் அதிகாரி) மௌலவி,அல்ஹாஜ், A.ஹஸன் அலி ஜமாலி (ஜமாஅத் தலைவர் S.P.பட்டிணம்) மௌலவி,அல்ஹாஜ், S.அப்துல் கபூர் ஜமாலி,Bsc., (தொழிலதிபர்,திண்டுக்கல்) மௌலவி,அல்ஹாஜ் P.மக்தூம் ஷா ஜமாலி,M.Com (துணைத் தலைவர் ;  அரசு பதிவுத்துறை,நெல்லை மாவட்டம்) மௌலானா S.முகமது அபூதாஹிர் M.Com.,M.L., ( மாவட்ட ஷெஸன்ஸ் நீதிபதி & கூடுதல் இயக்குநர்,தமிழ்நாடு நீதிபதிகள் பயிலரங்கம்,சென்னை.) மௌலவி, அல்ஹாஜ், M.K.அலாவுதீன் பாகவி ( இமாம் ; மஸ்ஜித் ஜாவித், அண்ணாநகர் ) மௌலவி, Dr.M.ஜ...

மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா

Image
மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் வலிகள் கோமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் நினைவு விழா,புத்ரா ஜெயா, மஸ்ஜிது மிஜான் ஜைனல் ஆபிதீனில், ஹிஜ்ரி 1434 ஜமாத்துல் அவ்வல் பிறை 4,மார்ச் 16 ஆம் தேதி சனிக்கிழமை, மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சி மாலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கியது.4-45 மணிக்கு மார்க்க மேதைகளான பேச்சாளர்களும்,பொதுமக்களும்,வி சேச அழைப்பாளர்களும்,ஒன்று கூடினார்கள்.5.00 மணிக்கு, பங்களா தேசைச் சேர்ந்த காரீ,ஷைஹ் அஹ்மது பின் யூசுஃப் அல் --அஜ்ஹரி அவர்கள் திருமறை ஓதி, ஆன்மீக மாநாட்டை துவக்கி வைத்தார்கள்.இந்த ஆன்மீக மாநாட்டினை,மலேசிய அரசாங்கமும், அமானா -- அல் வாரிஸீன் என்ற அமைப்பும், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.  5-10 மணிக்கு அமானா  -- அல் வாரிஸீனின் தலைவர்,மரியாதைக்குரிய,ஷைஹ் மௌலானா அஃபீஃபுதீன் அல் ஜைலானி அவர்கள், துஆ ஓதி  ஆரம்பித்து வைத்தார்கள். 5-15 மணிக்கு யாயாஸான் அல் --ஜென்டேரமி,மலேசியாவின் ஆலோசகர்,மரியாதைக்குரிய,ஷைஹ் முஹம்மது ஹஃபீஜ் பின் ஹாஜி ஸலாமத் அவர்கள்...

வாழ வழியா இல்லை பூமியில் !!!

Image
அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 4 ; 97 ) வாழ்க்கை என்பது ஒரு போராட்டம் எதிர் நீச்சல் போடத்தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்.வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை.அதில் மேடு பள்ளமும்,சுழியும்,பாறைகளும் நிறைந்திருக்கும் வாழ்க்கைப் படகை ஓட்டிச்செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும், பாறையில் மோதிவிடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பை பயன்படுத்த வேண்டும்.அந்த துடுப்பு எது? அது தான் ஈமான் என்னும் நம்பிக்கை.இறைநம்பிக்கை என்பது இறையிருப்பை ஏகத்துவத்துவத்தை ஏற்பது மட்டுமல்ல.அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்,''  ( 9 ; 40 ) அவன் எப்பொழுதும் நம்மை கைவிடமாட்டான்.நமக்கு உதவி செய்வான்.நாம் வெற்றி இலக்கை அடைந்தே தீருவோம் '' என்ற உறுதியான விசுவாசமும் ஆகும்.  இந்த வகையில்,தன்நம்பிக்கை என்பதும் ஈமானில் ஒரு அங்கமே.வாழ்க்கை என்றால் வேதனைகளும்.சோதனைகளும்  சகஜம்.சங்கடங்கள் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்டவேண்டும்.முழு வெற்றி -- சக்சஸ் ஃபுல்,சாகஸம் செய்தாலே சாத்தியமாகும்.இது சரித்திர...

நெருப்பில்லாமல் புகையாது !!!

Image
இப்பிரபஞ்சம் இறைவனாம் அல்லாஹ்வுடைய ஆற்றலின் அருள் வெளிப்பாடு.அவனை அறிய உதவும் ஓர் அற்புதமான அறிவியல் வாய்ப்பாடு.வித்தில் ஆலமரம் மறைந்துள்ளது.அகிலத்தில் அவன் மறைந்துள்ளான்.அவனை அறிந்துகொள்ள இரண்டு வழிகள்.ஒன்று  ஞாலத்தை அறிந்து மூலத்தை அறிய முற்படுவது.இது விஞ்ஞான வழி.புகையைப்பார்த்து நெருப்பைப் புரிவது மூலத்தின் மூலமானவனை அறிந்துகொள்வது, விஞ்ஞான வழி மெஞ்ஞானம்.முடிவான விஞ்ஞானம். இரண்டாவது வழி, மூலத்தைப்பார்த்து ஞாலத்தை அறிவது.இது முதல் நிலை மெஞ்ஞானம்.அதாவது மெஞ்ஞான வழி  விஞ்ஞானம்.மூலத்தைக்கொண்டு மூலத்தை அறிவது இது இரண்டாம் நிலை.முடிவான மெஞ்ஞானம்.மகான் தின்னூன் மிஸ்ரியிடம் எதைக்கொண்டு உங்களிறைவனை அறிந்து கொண்டீர்கள்.எனக்கேடகப்பட்டபோது.'' எனதிறைவனைக்கொண்டு எனது இறைவனை அறிந்துகொண்டேன்.எனதிறைவன் மட்டும் இல்லையெனில் நான் எனது இறைவனை அறிந்திருக்கமாட்டேன்.'' என்றார்கள்.இது மெஞ்ஞான வழி மெஞ்ஞானம். மிஸ்ரியின் இந்தக் கூற்றுக்கு இருபொருள்கள்.சுருட்டி மடக்கினேன் சரகுக்காக.  ( சரகு என்றால் ஷரிஅத் என்றொரு அர்த்தம் இருப்பதைப் போன்று குரு என்றொரு பொருளுமுண்டு)  நாம...

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 11 -04-2013 வியாழக்கிழமை ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1434 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் மௌலிது ஷரீஃப்  -21-4-2013 (ஜமாதுல் ஆகிர் பிறை 10-1434 ) ஞாயிற்றுக் கிழமையோடு நிறைவு பெறும்.ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,முஹம்மது இஸ்ஹாக் பிலாலி,பைஜி,ஹஜ்ரத் ஆகியோரது சீரிய தலைமையில் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அ...

யாஸய்யிதீ ஷைகீ பைத்து

Image
                                               யாஸய்யிதீ ஷைகீ பைத்து இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே! சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே! கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!! சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே! தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சம...

சந்தோஷம் வெளியே இல்லை!!!

Image
ஆங்கிலேய அறிஞர் ஒருவர் இப்படிக் கூறுவார்; '' நீ, சிறைச்சாலையில் இரும்புக் கம்பிகளுக்கு அப்பாலும் வான்வெளியைப் பார்க்க முடியும்.உனது பாக்கெட்டிலிருந்து பூவை எடுத்து நுகர்ந்து உன்னால் புன்னகைக்க முடியும். உனது வசந்த மாளிகையில் ப்ட்டாடை உடுத்தி பஞ்சுமெத்தையில் புரண்டு ஆத்திரப்பட்வும் ஆவேசம் கொள்ளவும் முடியும். உனது வீட்டின் மீது குடும்பத்தின் மீது செல்வத்தின் மீது எரிச்சல் பட்டு எரிந்து எரிந்து விழவும் பொரிந்து தள்ளவும் உன்னால் முடியும்.'' அப்படியென்றால் சந்தோஷம் என்பது காலத்திலோ இடத்திலோ இல்லை. அது உனது அசைக்க முடியாத நம்பிக்கையில் -- இதயத்தில் இருக்கிறது. இதயம் இறைவனின் நோட்டம் விழுமிடம்.உறுதியான ந்ம்பிக்கை அதில் உனக்கு உறைந்து விட்டால் சந்தோஷம் பொங்கிவிடும். அது உனது உயிரின் மீதும் ஆத்மாவின் மீதும் நிரம்பி வழிந்து அகிலத்தாரின் மீதும் பிரவாகம் எடுக்கும்.இமாம் இப்னு ஹன்பல் (ரஹ்) பல சோதனைகளுக்கு ம்த்தியிலும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தார்.அவரது ஆடை வென்மையாக ஒட்டுப்போடப்பட்டதாக இருந்தது.தனது கையால் அதை தைத்துக்கொள்வார்.அவரிடம் மூன்று களிமண் அறை...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு