Posts

Showing posts from May, 2013

தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு துவக்க விழா !!!

Image
அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு  துவக்க விழா ( 01.06.2013 ) சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஜமால் முஹம்மது கல்லூரி அருகிலுள்ள, வி.எஸ். எம்.மஹாலில் நடைபெறவுள்ளது. மௌலானா ஹாபிழ் யூசுப் அலி கிராஅத் ஓதுகிறார். தமிழக மஸ்ஜித் கூட்டமைப்பு அமைப்பாளர் எம். முஹம்மது சிக்கந்தர் தலைமை தாங்குகிறார்.திருச்சி டவுண் காஜி மௌலானா  ஜே. ஜலீல் சுல்தான் மன்பயீ ஆலிம், ஜமாஅத்துல் உலமாப் பொதுச் செயலாளர் திருச்சி  மௌலானா  எஸ்.எம். முஹம்மது மீரான் பாக்கவி, திருச்சி ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.முஹம்மது அன்சார் கும்பகோணம் எம்.ஏ. முஹம்மது ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் துணைத் தலைவர் மௌலானா ரூஹுல் ஹக், மவ்லானா உமர்ஃபாரூக், முஹம்மது ரபிக் (வேலூர்), எம். முஹம்மது பஷீர் (சென்னை), எம்.எஸ்.ஏ.ஷாஜகான் (இராமநாதபுரம்), எம்.ஏ. இனாயதுல்லா (கோவை),டி.நஜ்முதீன் (மதுரை), எம்.ஏ.ஹாரூன் ரஷீத் (சேலம்), ஹாஜிகே. செய்யது அப்பாஸ், (திருநெல்வேலி ),முஹம்மது சாதிக்,(மாயவரம்) எம்.எஸ். முஹம்மது யூனுஸ் (கடலூர்) ஆகியோர் வாழ...

அல் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப்

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 26--05-2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை ( ரஜப் பிறை 16 -- 1434 ) அன்று மிக விமர்சையாக  நடைபெற உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து, யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்களான,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,முஹம்மது இஸ்ஹாக் பிலாலி,பைஜி,ஹஜ்ரத் ஆகியோரது சீரிய தலைமையில் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்...

லால் பேட்டையில்,புனித மிகு புஹாரி ஷரீஃப் 37 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ்!!!

Image
லால் பேட்டையில்,புனித மிகு புஹாரி ஷரீஃபின், 37 ஆம் ஆண்டு நிறைவு விழா  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸ்  11-05-2013  சனிக்கிழமை மாலை,ஞாயிறு இரவு 9 மணியளவில் ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில்,ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி,காரீ.ஏ.நூருல் அமீன் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.மௌலானா மௌலவி  ஷைகுல் ஃபிக்ஹ்,முப்தி எஸ்.ஏ.அப்துர் ரப் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவரும்,ஜாமிஆவின் பேராசிரியர்,ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான்.மௌலானா மௌலவி ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்,துணைத் தலைவர் செங்கோட்டைச் சிங்கம், மௌலானா மௌலவி ஆவூர், எம்.அப்துஸ் சுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின்,துணைத் தலைவர் செங்கோட்டைச் சிங்கம், மௌலானா மௌலவி ஆவூர், எம்.அப்துஸ் சுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின் மகனார், மௌலானா அ.இஸ்மாயீல் ஹஸனி ஹஜ்ரத்,காட்டு மன்னார் கோயில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் த...

மன்பஈ உலமா பேரவை தொடக்கம்.நூற்றுக் கணக்கான மன்பஈ உலமாக்கள் பங்கேற்பு!

Image
தமிழகத்தின் தலைசிறந்த மார்க்க கல்விக் கேந்திரமாக விளங்கும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் கல்வி பயின்று வெளியேறும் மாணவர்களுக்கு மன்பஈ என்கிற பட்டம் வழங்கப்படுகிறது. கடந்த 150 ஆண்டுகளாக மிக சிறந்த மார்க்க கல்வியை ஊட்டி வரும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா அடுத்த மாதம் 22,23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் வேளையில் உலகம் முழுவதும் பரவிப் பணியாற்றும் மன்பஈ உலமாக்களை ஒன்றிணைக்கும் முகமாக மன்பஈ உலமா பேரவை துவக்க விழா  07/05/2013 செவ்வாய்க் கிழமை லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி தாருல் தப்ஸீர் கலைக் கூடத்தில் நடைப்பெற்றது. பேரவை தொடக்க விழா கூட்டத்திற்கு மெளலானா முப்தி அஷ்ரப் அலி மன்பஈ தலைமை வகித்தார்கள். மெளலானா தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ வரவேற்றுப் பேசினார்கள். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் துவக்கவுரை நிகழ்த்தினார்கள். ஜாமிஆ முதல்வர் மெளலானா ஏ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத், ஆவூர் அப்துல் ஷக்கூர் மன்பஈ,மதுரை பி.கே.என்.அப்துல் காதிர் மன்பஈ,மெளலானா ஹாமித் பக்ரி மன்...

அஜ்மீர் அரசியல் !!!

Image
சென்ற வருடம்,ஏப்ரல் 8 ம் தேதி பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒரு நாள் சொந்த முறைப் பயணமாக இந்தியா வந்தார். 'சுல்தானுல் ஹிந்த்' என்றும் 'கரீப் நவாஸ்' என்றும் புகழப்படுகிற அஜ்மீர் காஜா முஈனுத்தீன் சிஸ்தி வலியுல்லாஹ் தர்ஹாவிற்கு ஜியாரத் செய்ய வந்த அவரை  மதிய விருந்துக்கு வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து நேரடியாக நெ 7 ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு சென்று மதிய உணவை முடித்துக் கொண்ட சர்தாரி, பிரதமர் மன்மோகனுடன் தனிமையில் நேருக்கு நேர் 45 நிமிடங்கள் உரையாடினார்  மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமானவர் என்று இந்தியா குற்றம் சாட்டுகிற ஜமாத்து தாவா அமைப்பின் தலைவர் ஹாபிழ் முஹம்மது சஈதை கைது செய்ய போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், உலகின் நியாயவான்(?) அமெரிக்கா ஏப்ரல் 2012 ல் அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசு அறிவித்தது. அதன் எதிர் நடவடிக்கையாக பாகிஸ்தானை பூர்வீமாக கொண்டு இங்கிலாந்தின் ரோதர்ஹாமில் Rotherham  வசிக்கிற பெரும் பணக்காரர் லார்டு பீர் அஹ்மது, அதிபர் ஒபாமாவ...

உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாமே தீர்வு’ எனும் கொள்கையை பரவலாக்க, உலமாக்கள் உழைக்க வேண்டும்

Image
                                      ஒவ்வொரு பகுதியிலும் ஷரீஅத்,குர்ஆன் பிக்ஹு,மீலாது மாநாடுகள்,உலகின் எல்லா பிரச்சினைகளுக்கும் இஸ்லாமே தீர்வு' எனும் கொள்கையை பரவலாக்க, உலமாக்கள் உழைக்க வேண்டும் என்று, ஏப்ரல் 27, 28 தேதிகளில், சென்னை அடையார் குராசானி பீர் தர்ஹா மஸ்ஜிதில் நடைபெற்ற, ஜமாஅத்துல் உலமா மாநாட்டில் வேண்டுகோள் விடப்பட்டது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு- அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கிட உழைப்பதும்,உலகம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் வழியில் தீர்வு காண்பதும் முஸ்லிம்கள் அனைவர் மீதும் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்றும் எம் நோக்கத்தில் இஸ்லாத்தின் மாண்புகளை மென்மேலும் பரவலாக்கும் முயற்சியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஷரீஅத் மாநாடுகள், மீலாது விழாக்கள்,குர்ஆன் மாநாடுகள், ஃபிக்ஹ் மாநாடுகள், சமூக விழிப்புணர்வு மாநாடுகள் போன்றவை நடத்தப்பட வேண்டும். "உலகின் எல்லாப் பிரச்சினை களுக்கும் இஸ்லாமே தீர்வு'' என்ற கொள்கையைப் பரவலாக்கிட உலமாக்கள் ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு