புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள்.
மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகுஆலிம்களாகவும், கண்ணியமிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.
இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், இன்ஷா அல்லாஹ் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். இன்ஷா அல்லாஹ் அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் துவங்க இருக்கிறது பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.
வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment