லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற இமாம் மௌலானா பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..!
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற மௌலானா இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது……….!! அது ஒரு வித்தியாசமான செய்தியாகவும்,விழாவாகவும் இருந்தது. ஓர் ஊரில், ஒரு பள்ளிவாசலில்,தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் இமாமாகப் பணியாற்றுவது, இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்கள் மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள். ஆம்..! கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில்அவர்கள் சேவையாற்றத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய இந்தச் சாதனையைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகமும் உள்ளூர் மக்களும் இணைந்து பொன்விழாவையே கொண்டாடிவிட்டார்கள். விழாவில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. இமாம்களைப் பாராட்டுபவர்கள் பலரும்அவருடைய மார்க்க அறிவு, பேச்சாற்றல், உழைப்பு,தியாகம், அர்பணிப்பு ஆகியவற்றை வாயளவில் பாராட்டிவிட்டுச்சென்றுவிடுவார்கள். "உங்கள் சேவைக்கு மறுமையில் நற்கூலி கிடைக்கும் ஹஜ்ரத்,துஆச் ...