ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனிதம் வாய்ந்த மௌலிது ஷரீஃப் துவக்கம் !!!
.
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் வரும் ரபீவுல் ஆகிர் பிறை 1- (31-01-2014) வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடங்கி,பிறை 11- 4-1435
(10-02-2014) திங்கட்கிழமை வரை 11 நாட்கள்,மலேசியத் தலைநகர் நமது மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,அல்லாமா,எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெறும்,
அஸர் தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃப்,மஃரிபு தொழுகைக்குப்பின் சிறப்பு துஆ ஓதப்படும்.இது போன்று உலகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்...
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment