ஒடுக்கத்து புதன் பற்றி !!!


ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது.

ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன்
கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82

அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு.

-தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை.
-அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை.
-துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை.
-இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை.
நோயின் துவக்கம்.

عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். வென்குஷ்டமும் கருங்குஷ்டமும் புதன்கிழமை இரவில்தான் இறங்கும். அறிவிப்பாளர். 
 உமர் ரலி நூல் ஹாகிம்.

عن عبدالله بن عمر رضي الله عنهماقال إني سمعت رسول اللهصلي الله عليه وسلم يقول اجتنبوا الحجامة يوم الأربعاء فإنه الذي ابتلي الله أيوب فيه بالبلاء وما يبدو جذام ولا برص إلا في يوم الأربعاء أو في ليلة الأرباء[ابن ماجه، الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் சொன்னார்கள்.புதன்கிழமையன்று
(உடம்பிலிருந்து)இரத்தம் வெளியேற்றுவதை தவ்ர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால், புதன்கிழமையில்தான் அய்யூப்(அலை)அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். வென்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டமென்ற தொழுநோய் புதன்கிழமை பகலிலோ அல்லது இரவிலோதான் ஆரம்பமாகும்.


عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلي الله عليه و سلم قال من احتجم يوم الأربعاء ويوم السبت فرأى وضحا فلا يلومن إلانفسه[البيهقي]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இயம்பினார்கள். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவர் தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேற்றி அதன் காரணமாக தொழுநோயின் அடையாளத்தை தனது உடம்பில் பார்த்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்..அறிவிப்பாளர் அபூஹூரைரா رضي الله عنهநூல்.பைஹகீ
நஹ்ஸுடைய நாள்.
நஹ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு தீங்கு மற்றும் துர்ப்பாக்கியம் என்பது பொருளாகும்.,ஆத் கூட்டத்தினருக்கு தண்டனை இறக்கிவைத்த நாளை இறைவன் நஹ்ஸுடைய நாள் என குர்ஆனில் பெயரிடுகிறான்.

إنا أَرْسلْنا عليهم رِيْحًا صرْصرًا في يوم نحسمسْتمر

இறைவன் கூறினான். தொடராக துர்ப்பாக்கியமுள்ள நாளில் கடும்புயல் காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்54:19
அந்த நஹ்ஸுடைய நாள் புதன் கிழமையென்பதை கீழ்க்கானும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.


عن جابر قال نزل جبريل عليه السلام علي النبي صلي الله عليه وسلم فقال اقض باليمين مع الشاهد،وقال يوم الاربعاء يوم نحس مستمر[الطبراني في المعجم الاوسط]

இறைதூதர் صلي الله عليه وسلمஅவர்களிடம் ஜிப்ரில்அலைஹிஸ்லாம் அவர்கள் வந்து கூறினார்கள் ஒரு சாட்சியோடு சத்தியமிடுதலைக்கொண்டு தீர்ப்பு வழங்குங்கள்! புதன்கிழமை தொடர்பான தீங்குள்ள நஹ்ஸுடைய நாளாகும்.
அறிவிப்பாளர்.ஜாபிர் رضي الله عنهநூல்.தப்ரானி(அவ்சத்)


عن جابر بنلاعبدالله قال قال رسول الله صلي الله عليه وسلم أتاني جبريل عليه السلام فأمرني أن أقضي باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء نحس مستمر[البيهقي]
عن جابر قال قال النبي صلي الله عليه وسلم [أتاني جبريل فأمرني باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء يوم نحس مستمر[مسند أبي عوانة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் மொழிந்தார்கள்.
ஜிப்ரீல் عليه السلامஅவர்கள் என்னிடம் வந்து, ஒரு சாட்சியுடன் சத்தியமிடுதலும் இருந்தால் அவற்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கு எனக்கு கட்டளையிட்டார்கள். மேலும்,கூறினார்கள் புதன்கிழமை தொடர்ந்து தீங்குள்ள(நஹ்ஸுடைய) நாளாகும். அறிவிப்பாளர் ஜாபிர் رضي الله عنهநூல்.பைஹகீ.


நபிகளாருக்கு நோயின் தொடக்கம்.

قال الواقدي وقالوا بدأ رسول الله صلي الله عليه وسلم يوم الأربعاء لليلتين بقيتا من صفر،وتوفى يوم الاثنين لثنتي عشرة ليلة خلت من ربيع الأول[السيرة النبوية لابن كثير]

ஸஃபர் மாதத்தில் இரு நாட்கள் மீதமிருந்த நிலையில் நோய் ஆரம்பமானது. ரபீவுல்அவ்வல் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை இவ்வுலகைவிட்டும் மறைந்தார்கள்.

عن الزهري أخبرني أنس بن مالك قال أول ما اشتكىرسول الله صلي الله عليه وسلم كان ذلك يوم الأربعاء لليلتين بقيتا من صفر وهو في بيت ميمونة حتى أغمي عليه من شدة الوجع [السيرة الابن حبان]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டது புதன்கிழமையாகும், ஸஃபர் மாதம் முடிய இருநாட்கள் மீதமிருந்தன. அந்த நேரத்தில் அருமைத் துணைவியார் மைமூனாரலி அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். கடுமையான வலியின் காரணமாக மயக்கமுற்றார்கள்.
அறிவிப்பாளர் அனஸ்رضي الله عنهநூல்.:சீரா,,ஆசிரியர்.:இப்னுஹிப்பான்.


قال أبوعمر ثم بدأ برسول الله صلي الله عليه وسلم مرضه الذي مات يوم منه يوم الأربعاء، لليتين بقيتامن صفر سنة إحدى عشرة في بيت ميمونة، ثم انتقل حين اشتد مرضه إلي بيت عائشة،رضي الله عنها، وقبض يوم الاثنين ضحى في الوقت الذى دخل فيه المدينة لاثنتي عشرة خلت من ربيع الأول[أسد الغابة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைவதற்கு காரணமாக இருந்த நோய் புதன் கிழமைதான் ஆரம்பமானது.ஸஃபர் முடிவிற்கு இருநாட்கள் மீதமிருந்தன. அப்போது மைமூனாரலியல்லாஹ் அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். நோய் கடுமையானபோது ஆயிஷாரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ரபீவுல்அவ்வல் பிறை 12 ஆம் நாள் திங்கட்கிழமை ளுஹா நேரத்தில் அவர்களின் உயிர் பிரிந்தது.

தொகுத்து வழங்கியவர்கள்
என்றும் தங்களன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு