மேலப்பாளையம் மௌலானா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹழரத் அவர்களின் தாயார்,ஜமீலா அம்மா அவர்கள் மறைவு !!!
பேரன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின்
பேராசிரியர் மௌலானா அல்ஹாஃபிழ் P.A.காஜா முஈனுத்தீன்
பாக்கவி ஹழரத் அவர்களின் தாயார்,ஜமீலா அம்மா அவர்கள்
பேராசிரியர் மௌலானா அல்ஹாஃபிழ் P.A.காஜா முஈனுத்தீன்
பாக்கவி ஹழரத் அவர்களின் தாயார்,ஜமீலா அம்மா அவர்கள்
25-05-2016 இன்று அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும்
தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (25/05/2016)
மாலை 5 :00 மணிக்கு,மேலப்பாளையத்தில் நடைபெற்றது,
தாயார் அவர்களைப் பற்றி சில !!!
97 வயதை கடந்த அந்த அம்மையார் நினைவிழப்பதற்கு
சில நாள் முன்பு வரை, வணக்க வழிபாடுகளில் பேணுதளானவராகவும், குடும்ப விவகாரங்களில் வழிகாட்டியாகவும் உத்தரவிடுபவராகவும் இருந்தார். அந்த அம்மையாரின் உத்தரவின் படியே காஜா ஹஜ்ரத்தின் திருமணம் நடந்தது. அவரது உத்தரவின் படியே கடந்த மாதம் 24 ம்
தேதி காஜா ஹஜ்ரத்தின் மகன் அஸ்லம் சகாபியின் திருமணம்
நடைபெற்றது. தாயாரின் விழியசைவை காஜா ஹஜ்ரத் பின் பற்றுகிறவராகவும்,அந்த அம்மையார் தன் மகனுக்காக
அதிகமதிகம் துஆ செய்பவராகவும் இருந்தார் என்பது சுற்றத்தார்
அனைவரும் அறிந்த செய்தி. அல்லாஹ் அந்த பெருமாட்டியை தனக்கு நெருக்கமானவர்களின் அந்தஸ்தில் வைக்கட்டும்.

தகவல் -- மௌலானா அப்துல் அஜீஸ் பாகவி ஹழரத்
எல்லாம் வல்ல அல்லாஹ் தாயார் அவர்களின் நல்லறங்களை
ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய
வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்
பிரிவால் துயரப்படும் ஹழ்ரத் அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும்,
உற்றார், உறவினர், உலமாப்பெருமக்கள் மற்றும் நண்பர்கள்
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை
தந்தருளவும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்
ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!
தாயார் அவர்கள் தனது 97 வயதிலும்,தினமும் குர்ஆன்
ஷரீஃப் ஓதாமல் இருந்ததே இல்லை.குர்ஆன் மற்றும்
தொழுகைகள்.திக்ருகள் செய்து கொண்டே இருப்பார்கள்.
தொழுகைகள்.திக்ருகள் செய்து கொண்டே இருப்பார்கள்.
தொடர்ந்து குர்ஆன் ஷரீஃப் ஓதியதால்,தாயாரின்
கண்பார்வை ரெம்ப தெளிவாக இருந்தது.
தகவல் -- மௌலவி முஹம்மது ஹனீமத்துல்லாஹ் மன்பயீ
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்
அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன்
கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment